செய்திகள்

மோடி மீண்டும் பிரதமராக 63 சதவீதம் பேர் ஆதரவு- புதிய கருத்து கணிப்பில் தகவல்

Published On 2019-04-06 08:16 GMT   |   Update On 2019-04-06 08:16 GMT
பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று மோடி மீண்டும் பிரதமராக 63 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளதாக புதிய கருத்து கணிப்பில் தகவல் வெளியாகியுள்ளது. #Loksabhaelections2019 #PMModi #RahulGandhi
புதுடெல்லி:

பாராளுமன்றத்துக்கு ஏப்ரல் 11-ந்தேதி முதல் மே 19-ந்தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் முடிவுகள் மே 23-ந்தேதி அறிவிக்கப்பட உள்ளது.

மத்தியில் ஆட்சியைப் பிடிக்கப் போவது பாரதிய ஜனதாவா? அல்லது காங்கிரசா? என்ற எதிர் பார்ப்பு நாடு முழுவதும் நிலவுகிறது. இதுவரை வெளியான 2 முக்கிய கருத்து கணிப்புகள் மத்தியில் மீண்டும் பாரதிய ஜனதா கட்சி ஆட்சியைப் பிடிக்கும் என்று கூறியுள்ளது.

இந்த நிலையில் கடந்த மாதம் 2-ந்தேதி முதல் 22-ந்தேதி வரை சுமார் 20 நாட்களுக்கு நாடு முழுவதும் மிக பிரமாண்டமான கருத்து கணிப்பு நடத்தப்பட்டது. நே‌ஷனல் டிரஸ்ட் நடத்திய அந்த கருத்துக் கணிப்பில் சுமார் 31 ஆயிரம் பேர் பங்கேற்று தங்களது கருத்துக்களை வெளியிட்டனர். அந்த சர்வே முடிவு நேற்று வெளியிடப்பட்டது.

அந்த கருத்துக் கணிப்பில் பிரதமர் நரேந்திர மோடிக்கு நாடு முழுவதும் செல்வாக்கு அதிகரித்து இருப்பது தெரிய வந்துள்ளது. ராகுலுடன் ஒப்பிடுகையில் மோடியே வலுவான, சிறந்த தலைவர் என்று பெரும்பாலான வாக்காளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

யார் பிரதமராக வர வேண்டும் என்ற கேள்விக்கு சுமார் 63 சதவீதம் பேர் மோடியே மீண்டும் பிரதமராக வர வேண்டும் என்று கூறியுள்ளனர். கடந்த பிப்ரவரி மாதம் நே‌ஷனல் டிரஸ்ட் நடத்திய கருத்துக் கணிப்பில் மோடி பிரதமராக 52.8 சதவீதம் பேர்தான் ஆதரவு தெரிவித்து இருந்தனர்.

பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம் மீது குண்டு வீசிய பிறகு மோடிக்கு செல்வாக்கு 10 சதவீதம் அதிகரித்து 63 சதவீதமாக உயர்ந்து விட்டது குறிப்பிடத்தக்கது.



காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பிரதமராக மக்கள் மத்தியில் வரவேற்பு இல்லை. 26.9 சதவீதம் பேர் தான் ராகுல் பிரதமர் ஆக தகுதி உடையவர் என்று கூறியுள்ளனர்.

ஆந்திரா, தெலுங்கானா, தமிழகம், ஒடிசா, மேற்கு வங்காளம் மாநிலங்களில் தொடர்ந்து மாநில கட்சிகளுக்குத்தான் அதிக வரவேற்பு உள்ளது. இந்த மாநிலங்களில் ஒடிசா, மேற்கு வங்காளம் ஆகிய இரு மாநிலங்களிலும் மோடிக்கு செல்வாக்கு அதிகரித்துள்ளது. #Loksabhaelections2019 #PMModi #RahulGandhi
Tags:    

Similar News