செய்திகள்

பாராளுமன்ற தேர்தல் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தேர்தல் அறிக்கை வெளியீடு

Published On 2019-03-28 11:57 GMT   |   Update On 2019-03-28 11:57 GMT
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இன்று வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், குறைந்தபட்ச ஊதியமாக ரூ.18 ஆயிரம், பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுக்க உரிய சட்டம் இயற்றுவது உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.#LSpolls #CPM #ElectionManifesto
புதுடெல்லி:

தலைநகர் டெல்லியில் பாராளுமன்ற தேர்தலுக்கான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்பட்டது. இந்த தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள அம்சங்கள் வருமாறு:

பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுக்க உரிய சட்டங்கள் இயற்றப்படும். மக்களவை, சட்டப்பேரவையில் பெண்களுக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு அமல்படுத்தப்படும்

தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக ரூ.18,000 நிர்ணயிக்கப்படும். விலைவாசி உயர்வை பொறுத்து ஊதிய உயர்வு வழங்கப்படும்.

விவசாயிகளுக்கு உற்பத்தி செலவை விட 50 சதவீதம் அதிக தொகையில் குறைந்தபட்ச விலை நிர்ணயம் செய்ய சட்டம் இயற்றப்படும் 

தனியார் காப்பீடு நிறுவன சிகிச்சை முறை நிறுத்தப்பட்டு, சுகாதாரத்திற்கு ஜிடிபியில் 5 சதவீதம் ஒதுக்கப்படும். அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் வேலை என்பது அடிப்படை உரிமையாக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. #LSpolls #CPM #ElectionManifesto
Tags:    

Similar News