செய்திகள்

கர்நாடகாவில் மந்திரி வீட்டில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை

Published On 2019-03-28 05:44 GMT   |   Update On 2019-03-28 05:44 GMT
கர்நாடகாவில் நுண்ணீர் பாசனத்துறை மந்திரி வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் இன்று வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். #ITRaid #JDS #CSPuttaraju
பெங்களூரு:

பாராளுமன்ற தேர்தல் நெருங்கும் வேளையில், சட்டத்திற்கு புறம்பான வகையில் பணத்தை கொண்டு செல்லுதல், வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது போன்றவற்றை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் தேர்தல் ஆணையம் மற்றும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு  வருகின்றனர்.

கர்நாடகா, ஆந்திரா, தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் போலீசார் மேற்கொண்ட சோதனையில் பல லட்சம் மதிப்பிலான பணம், தங்கம், வெள்ளி போன்ற பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்நிலையில் கர்நாடகா மாநிலத்தின் நுண்ணீர் பாசனத்துறை மந்திரியும், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் முக்கிய தலைவருமான சிஎஸ் புட்டராஜு வின் வீட்டிற்கு இன்று காலை வருமான வரித்துறையினர் திடீரென சென்று சோதனையில் ஈடுபட்டனர்.



மேலும் புட்டராஜூவிற்கு பெங்களூரு, மாண்டியா, மற்றும் மைசூர் ஆகிய 3 இடங்களிலும் உள்ள 17 பொதுப்பணித்துறையைச் சார்ந்த ஒப்பந்ததாரர்கள், மற்றும் நுண்ணீர் பாசன துறையைச் சேர்ந்த 7 அதிகாரிகள் வீடுகளிலும், வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். #ITRaid #JDS #CSPuttaraju
Tags:    

Similar News