செய்திகள்

ஆந்திராவில் போட்டியிடும் மிகவும் பணக்கார வேட்பாளர் இவர் தான் - சுவாரஸ்ய தகவல்

Published On 2019-03-23 14:40 IST   |   Update On 2019-03-23 14:40:00 IST
ஆந்திராவில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்து வருகின்றனர். இதில் பணக்கார வேட்பாளர் யார் எனும் விவரம் வெளியாகியுள்ளது. #Andrapradesh #Richestcandidate #KondaVishweshwarReddy
ஐதராபாத்:

பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்து தேர்தல் பணிகளை தொடங்கி உள்ளன. ஏற்கனவே சில அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை முழுவதுமாக அறிவித்த நிலையில், சில கட்சிகள் ஒவ்வொரு கட்டமாக வெளியிட்டு வருகின்றன. அறிவிக்கப்பட்ட வேட்பாளர்கள் அந்தந்த தொகுதிகளுக்கு சென்று வேட்பு மனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர். வேட்பு மனுவுடன் சொத்து விவரங்கள் அடங்கிய பிரமாண பத்திரத்தையும் தாக்கல் செய்கின்றனர்.

இந்த வரிசையில் தெலுங்கானாவின் சிவெல்லா பகுதியில் போட்டியிடும் கொண்டா விஷ்வேஷ்வர் ரெட்டி,  சமீபத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார்.  வேட்பு மனுவுடன் சொத்து விவரம் குறித்த அறிக்கையையும் சமர்ப்பித்திருந்தார். அதில், அவரது சொத்து மதிப்பு ரூ. 895 கோடி என குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் ரூ.223 கோடி அசையும் சொத்துக்கள். அப்போலோ மருத்துவமனையின் பங்குதாரரான மனைவி சங்கீதா ரெட்டி பெயரில் ரூ.613 கோடி உள்ளது. மகன்கள் பெயரில் ரூ.20 கோடி உள்ளது என தெரிய வந்துள்ளது.



மேலும் ரெட்டி மற்றும் அவரது மனைவி பெயரில் ரூ.36 கோடியில் அசையா சொத்துக்கள் உள்ளன. இதேபோல் மனைவியின் பெயரில் ரூ.1.81 கோடி மதிப்பில் சொத்துக்கள் உள்ளன.

இருப்பினும் இவர்களிடத்தில் சொந்த கார் , பைக் என எந்த வாகனமும் இல்லை என்பது சுவாரஸ்யமான தகவல் ஆகும்.

ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் போட்டியிடும் வேட்பாளர்களில் விஷ்வேஷ்வர் ரெட்டிதான் பணக்கார வேட்பாளர் ஆவார். ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி ஆகியோரை விடவும், கொண்டா விஷ்வேஷ்வர் ரெட்டியின் சொத்து மதிப்பு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. #Andrapradesh #Richestcandidate #KondaVishweshwarReddy

Tags:    

Similar News