செய்திகள்

பாகிஸ்தான் பயங்கரவாதி சையத் சலாஹுதீனின் ரூ.1.22 கோடி சொத்து காஷ்மீரில் முடக்கம்

Published On 2019-03-19 11:45 GMT   |   Update On 2019-03-19 11:54 GMT
பாகிஸ்தானில் இருந்தவாறு காஷ்மீரில் பிரிவினைவாதத்தையும் இந்தியா மீது வன்முறை தாக்குதல்களையும் ஊக்குவித்து வரும் பயங்ரகவாதி சையத் சலாஹுதீனின் ரூ.1.22 கோடி சொத்துகளை இந்திய அரசு முடக்கியது. #EDattaches #terrorfunding #SyedSalahuddin
ஜம்மு:

பாகிஸ்தானில் இயங்கிவரும் ஹிஸ்புல் முஜாஹிதின் இயக்கத்தை பயங்கரவாத அமைப்பாக அறிவித்து உலகில் உள்ள பலநாடுகள் தடை விதித்துள்ளன. இந்த இயக்கத்தின் தலைவனான சையத் சலாஹுதீன் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள சிலரை மூளைச்சலவை செய்து பிரிவினைவாத செயல்களை ஊக்குவித்து வருகிறான்.

மேலும், இந்தியாவில் உள்ள பல பகுதிகளில் நடைபெற்ற வன்முறை தாக்குதல்களில் இவனுக்கு தொடர்புள்ளதும் உறுதிபட தெரியவந்துள்ளது. காஷ்மீரில் இருக்கும் தேர்ச்சிபெற்ற பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் நாட்டு உளவுத்துறை மற்றும் ராணுவத்தின் துணையுடன் சையத் சலாஹுதீன் ஏராளமான பண உதவி செய்து வருவதையும் இந்திய பொருளாதார அமலாக்கத்துறை கண்டுபிடித்தது.

இதுதொடர்பாக நடந்த தீவிர விசாரணையில் இவனிடம் பண உதவிபெற்று காஷ்மீரின் பண்டிப்போரா மற்றும் அம்மாநிலத்தில் சொத்துகளை வாங்கியிருந்த 7 பேருக்கு சொந்தமான ஒரு கோடியே 22 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 13 சொத்துகளை இந்திய பொருளாதார அமலாக்கத்துறை கைப்பற்றி, முடக்கி வைத்துள்ளது.

இவர்களில் ஒருவரான முஹம்மது ஷபி ஷா என்பவன் கள்ளத்தனமான பணப்பரிமாற்றம் மற்றும் பயங்கரவாத தாக்குதலுக்கு பின்புலமாக இருந்து நிதியுதவி செய்த வழக்குகளில் கைதாகி டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. #EDattaches #terrorfunding #SyedSalahuddin

Tags:    

Similar News