search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pakistan militant"

    பாகிஸ்தானில் இருந்தவாறு காஷ்மீரில் பிரிவினைவாதத்தையும் இந்தியா மீது வன்முறை தாக்குதல்களையும் ஊக்குவித்து வரும் பயங்ரகவாதி சையத் சலாஹுதீனின் ரூ.1.22 கோடி சொத்துகளை இந்திய அரசு முடக்கியது. #EDattaches #terrorfunding #SyedSalahuddin
    ஜம்மு:

    பாகிஸ்தானில் இயங்கிவரும் ஹிஸ்புல் முஜாஹிதின் இயக்கத்தை பயங்கரவாத அமைப்பாக அறிவித்து உலகில் உள்ள பலநாடுகள் தடை விதித்துள்ளன. இந்த இயக்கத்தின் தலைவனான சையத் சலாஹுதீன் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள சிலரை மூளைச்சலவை செய்து பிரிவினைவாத செயல்களை ஊக்குவித்து வருகிறான்.

    மேலும், இந்தியாவில் உள்ள பல பகுதிகளில் நடைபெற்ற வன்முறை தாக்குதல்களில் இவனுக்கு தொடர்புள்ளதும் உறுதிபட தெரியவந்துள்ளது. காஷ்மீரில் இருக்கும் தேர்ச்சிபெற்ற பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் நாட்டு உளவுத்துறை மற்றும் ராணுவத்தின் துணையுடன் சையத் சலாஹுதீன் ஏராளமான பண உதவி செய்து வருவதையும் இந்திய பொருளாதார அமலாக்கத்துறை கண்டுபிடித்தது.

    இதுதொடர்பாக நடந்த தீவிர விசாரணையில் இவனிடம் பண உதவிபெற்று காஷ்மீரின் பண்டிப்போரா மற்றும் அம்மாநிலத்தில் சொத்துகளை வாங்கியிருந்த 7 பேருக்கு சொந்தமான ஒரு கோடியே 22 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 13 சொத்துகளை இந்திய பொருளாதார அமலாக்கத்துறை கைப்பற்றி, முடக்கி வைத்துள்ளது.

    இவர்களில் ஒருவரான முஹம்மது ஷபி ஷா என்பவன் கள்ளத்தனமான பணப்பரிமாற்றம் மற்றும் பயங்கரவாத தாக்குதலுக்கு பின்புலமாக இருந்து நிதியுதவி செய்த வழக்குகளில் கைதாகி டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. #EDattaches #terrorfunding #SyedSalahuddin

    பாகிஸ்தான் ஆக்கிரமித்து வைத்துள்ள காஷ்மீர் எல்லைப்பகுதி வழியாக இன்று இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற பயங்கரவாதியை பாதுகாப்பு படையினர் இன்று சுட்டுக் கொன்றனர்.
    ஸ்ரீநகர்:

    ஜம்மு-காஷ்மீர் மாநிலம், பாரமுல்லா மாவட்டத்தில் பாகிஸ்தான் ஆக்கிரமித்து வைத்துள்ள காஷ்மீர் எல்லைக்கோட்டுப் பகுதியில் உள்ள கஸ்தூரி நார் எல்லைப்பகுதியில் இன்று இந்திய ராணுவம் மற்றும் எல்லை பாதுகாப்பு படையினர் வழக்கம்போல் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது, பாகிஸ்தான் ஆக்கிரமித்து வைத்துள்ள காஷ்மீர் பகுதியில் இருந்து சிலர் இந்திய பகுதிக்குள் ஊடுருவ முயன்றனர். இதை கவனித்துவிட்ட இந்திய எல்லை பாதுகாப்பு படையினர் அவர்களை திரும்பிப் போகும்படி எச்சரித்தனர்.

    அந்த எச்சரிக்கையை பொருட்படுத்தாத பயங்கரவாதிகள் துப்பாக்கிகளால் சுட்டவாறு பாதுகாப்பு படையினரை நோக்கி  முன்னேறி வந்தனர். பாதுகாப்பு படை வீரர்களும் எதிர்தாக்குதல் நடத்தினர்.

    இருதரப்புக்கும் இடையிலான துப்பாக்கிச் சண்டையில் இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் பயங்கரவாதிகளில் ஒருவனை இந்திய எல்லை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர். தொடர்ந்து அங்கு துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருவதாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

    குப்வாரா மாவட்டத்தில் உள்ள தங்டார் எல்லைக்கோட்டு பகுதி வழியாக நேற்று இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகளை இந்திய படையினர் சுட்டுக்கொன்றது நினைவிருக்கலாம். #Baramulla #Infiltrationbid
    ×