செய்திகள்
ஷியாமா சரண் குப்தா

உத்தரபிரதேசத்தில் பாஜக எம்பி சமாஜ்வாடி கட்சியில் இணைந்தார்

Published On 2019-03-16 15:20 IST   |   Update On 2019-03-16 15:20:00 IST
உத்தரபிரதேசத்தில் பாஜகவைச் சேர்ந்த எம்பி வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாததால், கட்சியில் இருந்து விலகி சமாஜ்வாடி கட்சியில் இணைந்துள்ளார். #ShyamaCharanGupta #BJPMP #joinedSamajwadi #LokSabhaElections2019
லக்னோ:

பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பாஜக சார்பில் நாடு முழுவதும் வேட்பாளர்களைத் தேர்வு செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. சில பகுதிகளில் இந்த வேட்பாளர் தேர்வில் உள்ள அதிருப்தி காரணமாக முக்கிய தலைவர்கள் விலகி உள்ளனர்.

அசாம் மாநிலத்தில், பாஜக கட்சியின் மூத்த தலைவரும் தற்போதைய தேஜ்பூர் எம்பியுமான ஆர்.பி.சர்மா, கர்நாடக மாநிலத்தில் மூத்த தலைவர் கே.பி.ஷனப்பா ஆகியோர் கட்சியில் இருந்து விலகி உள்ளனர்.



இந்நிலையில் உத்தர பிரதேசத்தின் அலகாபாத் தொகுதியின் எம்பியான ஷியாமா சரண் குப்தா, பாஜகவில் இருந்து இன்று திடீரென விலகி, சமாஜ்வாடி கட்சியில் இணைந்துள்ளார். பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாததால் விலகி உள்ளார்.

பாராளுமன்ற தேர்தலில் பாந்தா தொகுதியில் சமாஜ்வாடி கட்சி சார்பாக ஷியாமா சரண் குப்தா போட்டியிட, வாய்ப்பு வழங்கி உள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. #ShyamaCharanGupta #joinedSamajwadi #LokSabhaElections2019 #BJPMP
Tags:    

Similar News