செய்திகள்

மோடி மீண்டும் பிரதமர் ஆவதை தவிர்க்க முடியாது - எஸ்.எம்.கிருஷ்ணா

Published On 2019-03-12 08:30 IST   |   Update On 2019-03-12 10:41:00 IST
மோடி மீண்டும் பிரதமர் ஆவதை தவிா்க்க முடியாது என்று கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி எஸ்.எம்.கிருஷ்ணா கூறினார். #SMKrishna #PMModi
பெங்களூரு:

முன்னாள் முதல்-மந்திரி எஸ்.எம்.கிருஷ்ணா பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

மோடி மீண்டும் பிரதமராவது தவிர்க்க முடியாது. ஏனென்றால் நான் கொள்கையில் நம்பிக்கை கொண்டவன். இதன் காரணமாக நான் அதிக தொகுதிகளுக்கு சென்று பிரசாரம் செய்வேன். பா.ஜனதா வேட்பாளர்களின் வெற்றியை உறுதி செய்வேன்.



மோடி மீண்டும் பிரதமராக வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக நாங்கள் அனைவரும் முடிந்தவரை எங்களின் முயற்சிகளை மேற்கொள்வோம். நான் முதல்-மந்திரியாக இருந்தபோது பெங்களூருவின் வளர்ச்சிக்கு பல்வேறு பணிகளை செய்தேன். இதை நகர மக்கள் மறந்திருக்க மாட்டார்கள் என்று நான் நினைக்கிறேன்.

தேவேகவுடா, பெங்களூரு வடக்கு தொகுதியில் போட்டியிடுவதால் பா.ஜனதாவின் வெற்றியை பாதிக்காது. தனிப்பட்ட நபரை விட, கொள்கையே முக்கியமானது. ஆனால் அதற்கு பிரதமர் மோடி அப்பாற்பட்டவர். பா.ஜனதாவின் கொள்கையை அடிப்படையாக வைத்து நாங்கள் பிரசாரம் செய்வோம்.

யார் நல்ல முறையில் பணியாற்றுகிறார்கள் என்பது பெங்களூரு மக்களின் மனதில் இருக்கிறது. பெங்களூருவில் உள்ள மூன்று தொகுதிகளிலும் பா.ஜனதா பலம் வாய்ந்த கட்சியாக இருக்கிறது.

இவ்வாறு எஸ்.எம்.கிருஷ்ணா கூறினார். #SMKrishna #PMModi
Tags:    

Similar News