செய்திகள்

ராகுல் காந்தி இந்து என்பதற்கான ஆதாரம் என்ன? - மத்திய மந்திரி சர்ச்சை கேள்வி

Published On 2019-03-11 12:14 GMT   |   Update On 2019-03-11 12:14 GMT
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை ஒரு கலப்பினம் என குறிப்பிட்டுள்ள மத்திய இணை மந்திரி ஆனந்த் குமார் ஹெக்டே, அவர் இந்து என்பதற்கான ஆதாரம் என்ன? என கேள்வி எழுப்பியுள்ளார். #RahulGandhi #AnantkumarHegde
புதுடெல்லி:

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீர் எல்லைப்பகுதிக்குள் புகுந்து இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலில் அங்கிருந்த பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன. இந்த தாக்குதலில் எத்தனை பேர் கொல்லப்பட்டனர்? என்பது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் மத்திய அரசின் சார்பில் வெளியிடப்படவில்லை.  

இதுதொடர்பாக மத்திய அரசு உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

இந்நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக நேற்று கருத்து தெரிவித்த மத்திய இணை மந்திரி ஆனந்த் குமார் ஹெக்டே காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை தனிப்பட்ட முறையில் மிக மோசமாக விமர்சனம் செய்துள்ளார்.



பாகிஸ்தானுக்குள் புகுந்து நாம் நடத்திய தாக்குதலை ஒட்டுமொத்த உலகமும் ஏற்றுக்கொண்டுள்ள நிலையில் சிலர் இதற்கு ஆதாரம் வேண்டும் என்று கேட்கின்றனர்.

தன்னை ’பூணூல் அணிந்த இந்து’ என்று கூறிக்கொள்ளும் முஸ்லிம் தந்தைக்கும் - கிறிஸ்தவ தாய்க்கும் பிறந்த ராகுல் காந்தி, தான் ஒரு இந்துதான் என்பதற்கு என்ன ஆதாரம் வைத்திருக்கிறார்?. ஒரு முஸ்லிமின் மகன் எப்படி பிராமனர் ஆவார்? என ஆனந்த் குமார் ஹெக்டே காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார். #RahulGandhi  #AnantkumarHegde 
Tags:    

Similar News