search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Anantkumar Hegde"

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை ஒரு கலப்பினம் என குறிப்பிட்டுள்ள மத்திய இணை மந்திரி ஆனந்த் குமார் ஹெக்டே, அவர் இந்து என்பதற்கான ஆதாரம் என்ன? என கேள்வி எழுப்பியுள்ளார். #RahulGandhi #AnantkumarHegde
    புதுடெல்லி:

    பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீர் எல்லைப்பகுதிக்குள் புகுந்து இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலில் அங்கிருந்த பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன. இந்த தாக்குதலில் எத்தனை பேர் கொல்லப்பட்டனர்? என்பது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் மத்திய அரசின் சார்பில் வெளியிடப்படவில்லை.  

    இதுதொடர்பாக மத்திய அரசு உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

    இந்நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக நேற்று கருத்து தெரிவித்த மத்திய இணை மந்திரி ஆனந்த் குமார் ஹெக்டே காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை தனிப்பட்ட முறையில் மிக மோசமாக விமர்சனம் செய்துள்ளார்.



    பாகிஸ்தானுக்குள் புகுந்து நாம் நடத்திய தாக்குதலை ஒட்டுமொத்த உலகமும் ஏற்றுக்கொண்டுள்ள நிலையில் சிலர் இதற்கு ஆதாரம் வேண்டும் என்று கேட்கின்றனர்.

    தன்னை ’பூணூல் அணிந்த இந்து’ என்று கூறிக்கொள்ளும் முஸ்லிம் தந்தைக்கும் - கிறிஸ்தவ தாய்க்கும் பிறந்த ராகுல் காந்தி, தான் ஒரு இந்துதான் என்பதற்கு என்ன ஆதாரம் வைத்திருக்கிறார்?. ஒரு முஸ்லிமின் மகன் எப்படி பிராமனர் ஆவார்? என ஆனந்த் குமார் ஹெக்டே காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார். #RahulGandhi  #AnantkumarHegde 
    அனந்தகுமார் ஹெக்டே மத்திய மந்திரியாக இருக்க தகுதியற்றவர் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆட்சேபனை தெரிவித்துள்ளார். #HinduGirl #AnanthKumarHegde #RahulGandhi
    புதுடெல்லி:

    மத்திய திறன் மேம்பாட்டு இணை மந்திரி அனந்தகுமார் ஹெக்டே நேற்று முன்தினம் ஒரு நிகழ்ச்சியில் பேசுகையில், “இந்து பெண்ணை தொட்டவரின் கை, உடம்பில் இருக்கக்கூடாது” என்றார். இது, சர்ச்சையை ஏற்படுத்தியது. அவருக்கு கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ் கண்டனம் தெரிவித்தார். அதற்கு அனந்தகுமார் ஹெக்டே தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் “தினேஷ் குண்டுராவ், ஒரு முஸ்லிம் பெண்மணியின் பின்னால் ஓடியவர் என்று மட்டுமே எனக்கு தெரியும்” என்று கூறி இருந்தார்.



    இந்நிலையில், ஹெக்டேவின் கருத்துக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆட்சேபனை தெரிவித்துள்ளார். “இந்த மனிதர் ஒவ்வொரு இந்தியரையும் தர்மசங்கடப்படுத்துகிறார். அவர் மத்திய மந்திரியாக இருக்க தகுதியற்றவர். எனவே, அவரை நீக்க வேண்டும்” என்று ராகுல் காந்தி கூறியுள்ளார். #HinduGirl #AnanthKumarHegde #RahulGandhi 
    ×