செய்திகள்

அணு ஆயுதத்தை இந்தியா முதலில் பயன்படுத்தாது- மன்மோகன் சிங்

Published On 2019-02-25 05:07 GMT   |   Update On 2019-02-25 05:07 GMT
அணு ஆயுத விவகாரத்தில் உலக அளவில் நெருக்கடி ஏற்பட்டிருப்பதாகவும், அணு ஆயுதத்தை முதலில் பயன்படுத்துவதில்லை என்பதில் இந்தியா உறுதியாக உள்ளதாகவும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்தார். #ManmohanSingh
புதுடெல்லி:

டெல்லியில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கலந்துகொண்டு பேசியதாவது:-

அணு ஆயுத பயன்பாட்டை கட்டுப்படுத்தும் பழைய ஒப்பந்தங்கள் காலாவதியாகிவிட்டதால், உலகளாவிய அளவில் தற்போது அணு ஆயுத விவகாரத்தில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. 70 ஆண்டுகளில் அணு ஆயுத அறிவியல் மற்றும் தொழில்நுட்பமானது மிகவும் மேம்பட்டுள்ளது. அணு ஆயுதங்களைப் பெறுவது என்பது எளிதாகி உள்ளது. இதனால் இடர்களும் சவால்களும் அதிகரித்துள்ளன.



பல்வேறு நாடுகள் தங்களின் அணு ஆயுதங்களை நவீனமாக்கி வருகின்றன. அணு ஆயுத பரவல் தடைக்கான வாய்ப்புகள் குறைந்து வருகின்றன. செயற்கை நுண்ணறிவு சைபர் பாதிப்புகள் அதிகரிப்பதால் நிச்சயமற்ற தன்மையும் அதிகரிக்கிறது.

அணு ஆயுதத்தை முதலில் பயன்படுத்துவதில்லை என்பதில் இந்தியா உறுதியாக உள்ளது. அணு ஆயுத தடை தொடர்பான விரிவான, நவீன அமைதித் திட்டங்களைக் கொண்டுள்ள ஒரே நாடு இந்தியா தான். பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு பதிலடி கொடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டதால், அணு  ஆயுத சோதனை நடத்தப்பட்டது. அதன்பின்னர் அணு ஆயுத விவகாரத்தில் சுமார் 25 ஆண்டுகள் வரை சுய கட்டுப்பாட்டுடன் இருந்தது. அதனால்தான் அணுசக்தி விநியோக நாடுகள் குழு, 2008ம் ஆண்டு இந்தியாவுக்கு சிறப்பு சலுகைகளை வழங்கியது.

இவ்வாறு அவர் பேசினார். #ManmohanSingh
Tags:    

Similar News