செய்திகள்

புல்வாமா தாக்குதலில் பலியான வீரர்களின் உடல்களுக்கு டெல்லியில் ராகுல் காந்தி அஞ்சலி

Published On 2019-02-15 15:09 GMT   |   Update On 2019-02-15 15:09 GMT
புல்வாமா பயங்கரவாத தாக்குதலில் பலியான வீரர்களின் உடல்கள் இன்றிரவு விமானம் மூலம் டெல்லி கொண்டு வரப்பட்டன. பாலம் விமான நிலையத்தில் ராகுல் காந்தி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். #CRPFsoldier #PulwamaAttack #RahulGandhi #Rahullaywreath #CRPFjawans
புதுடெல்லி:

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், நேற்றைய தாக்குதலில் உயிரிழந்த 40 வீரர்களின் உடல்களும் பிரேதப் பரிசோதனைக்கு பின்னர் பட்காம் பகுதியில் உள்ள ராணுவ முகாமில் இறுதி மரியாதை செலுத்தப்பட்டது.

மத்திய மந்திரி ராஜ்நாத் சிங், காஷ்மீர் கவர்னர் சத்யபால் சிங் ஆகியோர் அங்கு சென்று வீரர்களின் உடல்களுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.  

பின்னர் ராஜ்நாத் சிங், மத்திய பாதுகாப்பு படையின் ஜம்மு-காஷ்மீர் மாநில டி.ஜி.பி. தில்பாக் சிங் ஆகியோர் மரணம் அடைந்த வீரரின் உடல் வைக்கப்பட்டிருந்த பெட்டியை தோளில் சுமந்தபடி நடந்துசென்று வாகனத்தில் ஏற்றி வைத்தனர்.


அங்கிருந்து 40 வீரர்களின் உடல்களும் தனி விமானம் மூலம் டெல்லிக்கு கொண்டு வரப்பட்டன. வீரர்களின் உடல்களை சுமந்து வந்த விமானம் இன்றிரவு சுமார் 8 மணியளவில் டெல்லியில் ராணுவத்துக்கு சொந்தமான பாலம் விமான நிலையத்தை வந்தடைந்தது.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ராணுவ மந்திரி நிர்மலா சீதாரமன், உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால்,  மத்திய மந்திரி ராஜ்யவர்தன் சிங் ரத்தோர், இந்திய ராணுவ தளபதி பிபின் ராவத், விமானப்படை தளபதி தனோவா லே, கடற்படை தளபதி சுனில் லான்பா  உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.  #CRPFsoldier #PulwamaAttack #RahulGandhi  #Rahullaywreath #CRPFjawans
Tags:    

Similar News