செய்திகள்

கர்நாடக அரசியலில் திடீர் திருப்பம் - காங். கூட்டணி அரசுக்கு சுயேச்சை எம்எல்ஏ மீண்டும் ஆதரவு

Published On 2019-02-13 21:33 IST   |   Update On 2019-02-13 21:33:00 IST
கர்நாடக அரசியலில் திடீர் திருப்பமாக, அரசுக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெற்ற சுயேச்சை எம்எல்ஏ நாகேஷ் இன்று காங்கிரஸ் தலைவர் சித்தராமையாவிடம் தனது ஆதரவை தெரிவித்தார். #KarnatakaCongress #IndependentMLA
பெங்களூரு:

கர்நாடக மாநிலத்தில் நடைபெற்று வரும் குமாரசாமி தலைமையிலான ஆட்சியை கலைக்க பா.ஜ.க. ஈடுபட்டு வருவதாக குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்க கோடிக்கணக்கில் பேரம் பேசப்படுவதாக தகவல்கள் வெளியானது.

இதற்கிடையே, கர்நாடக மாநிலத்தில் முதல் மந்திரி குமாரசாமி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை நாகேஷ் மற்றும் சங்கர் ஆகிய இரு சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் கடந்த மாதம் திரும்பப் பெற்றனர். இதுதொடர்பாக அவர்கள் இருவரும் ஆளுநருக்கு கடிதம் மூலம் தெரிவித்தனர்.

இந்நிலையில், கர்நாடக அரசியலில் திடீர் திருப்பமாக, அரசுக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெற்ற சுயேச்சை எம்எல்ஏ நாகேஷ் இன்று காங்கிரஸ் தலைவர் சித்தராமையாவிடம் தனது ஆதரவு கடிதத்தை அளித்தார். அப்போது காங்கிரஸ் தலைவர் டிகே சிவகுமாரும் உடனிருந்தார். #KarnatakaCongress #IndependentMLA
Tags:    

Similar News