செய்திகள்

நாடாளுமன்ற குழு முன் ஆஜராக ‘டுவிட்டர்’ தலைமை செயல் அதிகாரி மறுப்பு

Published On 2019-02-09 19:20 GMT   |   Update On 2019-02-09 19:20 GMT
நாடாளுமன்ற நிலைக்குழு முன் ஆஜராக முடியாது என ‘டுவிட்டர்’ தலைமை செயல் அதிகாரியும், மூத்த அதிகாரிகளும் மறுத்து விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. #TwitterCEO #ParliamentaryPanel
புதுடெல்லி:

சமூக ஊடகங்களில் குடிமக்களின் உரிமைகளை பாதுகாப்பது தொடர்பாக தகவல் தொடர்பு துறைக்கான நாடாளுமன்ற குழு விசாரணை ஒன்றை நடத்துகிறது.

பாரதீய ஜனதா கட்சி எம்.பி. அனுராக் தாக்குர் தலைமையிலான இந்தக்குழு கடந்த 7-ந் தேதி கூட இருந்தது. இதில் கலந்து கொள்வதற்கு ‘டுவிட்டர்’ நிறுவனத்துக்கு 1-ந் தேதி கடிதம் அனுப்பப்பட்டது.

பின்னர் அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி, மூத்த அதிகாரிகள் வந்து கலந்து கொள்வதற்கு வசதியாக இந்த கூட்டம் 11-ந் தேதிக்கு (நாளை) ஒத்தி போடப்பட்டது.

ஆனாலும் நாடாளுமன்ற நிலைக்குழு முன் ஆஜராக முடியாது என ‘டுவிட்டர்’ தலைமை செயல் அதிகாரியும், மூத்த அதிகாரிகளும் மறுத்து விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

குறைந்த கால அவகாசத்தில் வர முடியாது என அவர்கள் கூறி உள்ளதாக அந்த தகவல்கள் மேலும் கூறுகின்றன.  #TwitterCEO #ParliamentaryPanel 
Tags:    

Similar News