செய்திகள்

ராஜஸ்தானில் ரே‌ஷனில் 1 ரூபாய்க்கு 1 கிலோ கோதுமை - அசோக் கெலாட் அறிவிப்பு

Published On 2019-01-24 06:37 GMT   |   Update On 2019-01-24 06:37 GMT
ராஜஸ்தான் ரே‌ஷன் கடையில் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு ஒரு கிலோ கோதுமை ஒரு ரூபாய்க்கு வழங்கப்படும் என்று முதல் மந்திரி சோக் கெலாட் அறிவித்துள்ளார். #AshokGehlot
ஜெய்ப்பூர்:

ராஜஸ்தான் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. முதல்வராக அசோக் கெலாட் பதவி ஏற்றார்.

தேர்தல் வாக்குறுதியில் விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று காங்கிரஸ் அறிவித்தது. அதன்படி விவசாய கடன் தள்ளுபடி செய்யும் பணி நடந்து வருகிறது.

இந்தநிலையில் ரே‌ஷன் கடையில் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு ஒரு கிலோ கோதுமை ஒரு ரூபாய்க்கு வழங்கப்படும் என்று முதல்வர் அசோக் கெலாட் அறிவித்தார்.

சட்டசபையில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவித்து முதல்வர் அசோக் கெலாட் பேசியதாவது:-

வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு ஒரு கிலோ கோதுமை ஒரு ரூபாய்க்கு ரே‌ஷன் கடையில் வழங்கப்படும். இதன்மூலம் ரூ.1.53 கோடி மக்கள் பயன் அடைவார்கள். சிறிய மற்றும் வயதான விவசாயிகள் தற்போது பென்‌ஷன் திட்டத்தில் சேர்க்கப்படாமல் உள்ளனர். அவர்களும் பென்‌ஷன் திட்டத்தில் சேர்க்கப்படுவார்கள்

பால் கொள்முதல் விவசாயிகளுக்கு ஒரு லிட்டர் பாலுக்கு ரூ.2 போனஸ் வழங்கப்படும் 5 ஆயிரம் பால் பூத்துக்கள் திறக்கப்படும். விவசாயிகள் சிறப்பு சலுகையாக சிறிய கால கடன்தொகை வழங்கப்படும். மத்திய கூட்டுறவு வங்கி, நில வளர்ச்சி வங்கியில் விவசாயிகள் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். முற்பட்டோர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும். ராஜஸ்தானில் 10 சதவீத இடஒதுக்கீடு அமல்படுத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார். #AshokGehlot

Tags:    

Similar News