செய்திகள்

அயோத்தி வழக்கை ஜனவரி 10ம் தேதி புதிய அமர்வு விசாரிக்கும் - சுப்ரீம் கோர்ட்

Published On 2019-01-08 12:48 GMT   |   Update On 2019-01-08 12:48 GMT
அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கை 10-ம் தேதி முதல் 5 பேர் கொண்ட புதிய அமர்வு விசாரிக்கும் என உச்சநீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது. #SC #AyodhyaCase
புதுடெல்லி:

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கில், அலகாபாத் உயர்நீதிமன்றம் 2010-ம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பினை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் 14 மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகளை தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது. 
 
இந்த வழக்குகளை 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு பரிந்துரைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அயோத்தி வழக்குகள் உச்சநீதிமன்றத்தின் புதிய அமர்வுக்கு மாற்றப்படும் என்று நீதிபதிகள் அறிவித்து, விசாரணையை 10-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.



இந்நிலையில் இந்த வழக்கை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அரசியல் சாசன பெஞ்ச் விசாரிக்கும் என உச்சநீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது. இந்த அமர்வில் ரமணா, லலித், பாப்தே, சந்திரஷூட் ஆகிய நீதிபதிகளும் இடம்பெறுகின்றனர்.

இந்த புதிய அமர்வு வரும் 10-ம் தேதி முதல் அயோத்தி நிலம் தொடர்பான வழக்கை விசாரிக்கும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. #SC #AyodhyaCase 
Tags:    

Similar News