செய்திகள்

மும்பையில் மீண்டும் தீ விபத்து- 5 வாகனங்களில் தீயணைப்பு வீரர்கள் விரைந்தனர்

Published On 2018-12-29 09:18 IST   |   Update On 2018-12-29 09:18:00 IST
மும்பை கமலா மில்ஸ் அருகே கட்டுமானப் பணி நடைபெற்று வரும் அடுக்குமாடி கட்டிடத்தில் இன்று தீவிபத்து ஏற்பட்டது. #Mumbaifire
மும்பை:

மும்பை கமலா மில்ஸ் வளாகம் அருகே பல தளங்கள் கொண்ட பிரமாண்ட கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இந்த கட்டிடத்தின் ஒரு தளத்தில் இருந்து இன்று காலை புகை எழுந்தது. பின்னர் சிறிது நேரத்தில் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதுபற்றி தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

உடனே 5 வாகனங்களில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த தீ விபத்தில் உயிர்ச்சேதம் ஏற்பட்டதாக இதுவரை தகவல் வெளியாகவில்லை.

இதேபோல் நேற்று மும்பை திலக் நகரில் உள்ள 16 மாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். கடந்த வாரம் அந்தேரி புறநகர் பகுதியில் உள்ள இஎஸ்ஐ மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 8 பேர் பலியாகினர். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இதே கமலா மில்ஸ் வளாகத்தில் உள்ள இரண்டு விடுதிகளில் தீப்பிடித்ததில் 14 பேர் மரணம் அடைந்தது குறிப்பிடத்தக்கது. #MumbaiFire
Tags:    

Similar News