செய்திகள்

சிபிஐ இயக்குநருக்கு லஞ்சம் - இடைத்தரகர் ஜாமினில் விடுதலை

Published On 2018-12-18 10:49 GMT   |   Update On 2018-12-18 10:49 GMT
சி.பி.ஐ. இயக்குநருக்கு லஞ்சப்பணம் கைமாறிய விவகாரத்தில் இடைத்தரகராக செயல்பட்ட மனோஜ் பிரசாத் இன்று ஜாமினில் விடுவிக்கப்பட்டார். #Delhicourt #ManojPrasad #ManojPrasadbail #briberycase
புதுடெல்லி:

சி.பி.ஐ. இயக்குநராக முன்னர் இருந்த அலோக் வர்மா, சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா ஆகியோர் இடையே மோதல் இருந்து வந்த நிலையில், ராகேஷ் அஸ்தானா 3 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக அவர் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது.

அலோக் வர்மா சி.பி.ஐ. இயக்குனர் பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார். இடைக்கால இயக்குனராக நாகேஸ்வர ராவ் நியமிக்கப்பட்டார். லஞ்சப்பணம் கைமாறிய இவ்விவகாரத்தில் இடைத்தரகராக செயல்பட்ட மனோஜ் பிரசாத் என்பவரை கடந்த அக்டோபர் மாதம் 17-ம் தேதி கைது செய்த சி.பி.ஐ. அதிகாரிகள் அவரை விசாரணை காவலில் அடைத்து வைத்திருந்தனர்.

ராகேஷ் அஸ்தானா

தன்னை ஜாமினில் விடுதலை செய்ய வேண்டும் என்று மனோஜ் பிரசாத் முன்னர் தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

இந்நிலையில்,  மனோஜ் பிரசாத்தை இன்று ஜாமினில் விடுவித்து சி.பி.ஐ. சிறப்பு கோர்ட் நீதிபதி சந்தோஷ் ஸ்நேஹி மான் உத்தரவிட்டுள்ளார். #Delhicourt #ManojPrasad #ManojPrasadbail #briberycase
Tags:    

Similar News