செய்திகள்

மத்திய மந்திரி ராம்தாஸ் அத்வாலேவை கன்னத்தில் அறைய முயன்றதால் பரபரப்பு

Published On 2018-12-09 15:04 IST   |   Update On 2018-12-09 15:04:00 IST
மகாராஷ்டிராவில் மத்திய மந்திரி ராம்தாஸ் அத்வாலே மீது கன்னத்தில் அறைய முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. #RamdasAthawale
மும்பை:

மகாராஷ்டிரா மாநிலம் அம்பர்நாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் மத்திய மந்திரியும், குடியரசு கட்சி தலைவருமான ராம்தாஸ் அத்வாலே பங்கேற்றார்.

அப்போது கூட்டத்தில் இருந்த பிரவீன் கோசுவாமி அவரை கன்னத்தில் அறைய முயன்றார். இச்சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.



இதையடுத்து, அவரது தொண்டர்கள் அந்த நபரை பிடித்து அடித்து உதைத்தனர். இதில் காயமடைந்த அவரை போலீசார் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதுதொடர்பாக குடியரசு கட்சியினர் கூறுகையில், ராம்தாஸ் அத்வாலேவிற்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு உள்ளது. ஆனாலும், உள்ளூர் போலீசார் உரிய பாதுகாப்பை அளிக்கவில்லை என குற்றம் சாட்டியுள்ளது. #RamdasAthawale
Tags:    

Similar News