செய்திகள்

மக்களிடம் பிளவு ஏற்படுத்தியதுடன் கடவுளையும் பாஜக ஜாதி ரீதியாக பிரிக்கிறது- மாயாவதி குற்றச்சாட்டு

Published On 2018-12-07 12:15 GMT   |   Update On 2018-12-07 12:15 GMT
பாரதீய ஜனதா ஏற்கனவே மக்களை ஜாதி ரீதியாக பிரித்தாளும் சூழ்ச்சியில் ஈடுபட்டுள்ளது. இப்போது கடவுளை கூட அவர்கள் விட்டு வைக்க வில்லை என்று மாயாவதி குற்றம் சாட்டியுள்ளார். #mayawati #yogiadityanath

புதுடெல்லி:

ராஜஸ்தானில் பிரசாரம் மேற்கொண்ட உத்தரபிரதேச மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் அனுமான், காடுகளில் வசிக்கும் சமூகத்தை சேர்ந்தவர். அவர் ஒரு தலித் என்று கூறி இருந்தார்.

இது தொடர்பாக பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி கடுமையாக விமர்சித்துள்ளார்.

டெல்லியில் அம்பேத்கார் நினைவு நாள் நிகழ்ச்சியில் மாயாவதி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

பாரதீய ஜனதா ஏற்கனவே மக்களை ஜாதி ரீதியாக பிரித்தாளும் சூழ்ச்சியில் ஈடுபட்டுள்ளது. இப்போது கடவுளை கூட அவர்கள் விட்டு வைக்க வில்லை.

கடவுள்களை ஜாதி ரீதி யாக பிரிக்க பார்க்கிறார்கள். அதனால் தான் முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் அனுமானை தலித் என்று கூறி இருக்கிறார்.


அப்படியானால் அனுமான் கோவில்களில தலித்துகளை பூசாரியாக நியமிக்க வேண்டும் என்று மக்கள் அவரிடம் கோரிக்கை வைக்க வேண்டும். இந்த வி‌ஷயத்தில் மக்கள் விழிப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும்.

பாரதீய ஜனதா ஆட்சியில் விவசாயிகள் கடும் துயரத்துக்கு ஆளாகி இருக்கிறார்கள்.

ஆனால், அவர்கள் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது பற்றி தான் சிந்தித்து கொண்டு இருக்கிறார்கள்.

அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய அடிப்படை பிரச்சினைகளை பின்னுக்கு தள்ளி விட்டு அரசியல் சட்டத்துக்கு விரோதமாக செயல்படுகிறார்கள்.

இவ்வாறு மாயாவதி பேசினார். #mayawati #yogiadityanath

Tags:    

Similar News