செய்திகள்

தெலுங்கானாவில், இன்று தேர்தல் - வாக்காளர்களுக்கு கொண்டு சென்ற ரூ.3½ கோடி சிக்கியது

Published On 2018-12-07 01:29 IST   |   Update On 2018-12-07 01:29:00 IST
தெலுங்கானாவில் வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக கொண்டு சென்ற ரூ.3½ கோடி பணத்தை தேர்தல் அதிகாரிகளும், போலீசாரும் பறிமுதல் செய்தனர். #TelanganaAssembly #Election2018 #CashSeized
ஐதராபாத்:

தெலுங்கானா சட்டசபைக்கு இன்று (வெள்ளிக்கிழமை) தேர்தல் நடக்கிறது. இதை முன்னிட்டு வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்படுவதை தடுப்பதற்காக மாநிலம் முழுவதும் தேர்தல் அதிகாரிகளும், போலீசாரும் கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில் வாரங்கல் மாவட்டம் வழியாக சென்று கொண்டிருந்த வேனை அதிகாரிகள் நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது அந்த வேனில் ரூ.3½ கோடி இருந்தது தெரியவந்தது.

இந்த பணம் வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக கொண்டு சென்றதாக கூறப்படுகிறது. 
Tags:    

Similar News