செய்திகள்

மரணத்தை முன்கூட்டியே சொன்ன ஜாபர் ஷரிப்

Published On 2018-11-26 15:33 IST   |   Update On 2018-11-26 15:33:00 IST
முன்னாள் மத்திய மந்திரியும் கர்நாடக மாநில மூத்த காங்கிரஸ் தலைவருமான ஜாபர் ஷரிப் உயிர் போகப்போவதை முன்கூட்டியே சொன்ன சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. #FormerRailwayminister #CKJafferSharief
பெங்களூரு:

முன்னாள் மத்திய மந்திரியும் கர்நாடக மாநில மூத்த காங்கிரஸ் தலைவருமான ஜாபர் ஷரிப் நேற்று மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார்.

85 வயதான அவருக்கு 20 ஆண்டுகளுக்கு முன்பு இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்தது. சமீப ஆண்டுகளாக உடல்நலம் பாதிக்கப்பட்டு தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்தார்.

கடந்த 23-ந்தேதி அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் பெங்களூருவில் உள்ள போர்டிஸ் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அதன்பிறகு உடல்நலம் சற்று தேறியது.

இதயத்தில் உள்ள கோளாறை சரி செய்வதற்காக நேற்று ஆபரே‌ஷன் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக நேற்று மதியம் அவர் இருந்த அறையில் இருந்து ஸ்டிரெச்சரில் ஆபரே‌ஷன் தியேட்டருக்கு அழைத்து சென்றனர்.

அப்போது தனது பேரன் அப்துல் வகாப் ஷெரீப்பிடம் நான் உயிர் பிழைக்கமாட்டேன். நான் மரணமடைய போகிறேன் என்று கூறினார். பின்னர் ஆபரே‌ஷன் தியேட்டருக்குள் கொண்டு சென்று ஆபரே‌ஷன் டேபிளில் படுக்க வைத்தனர். அப்போது மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார்.

நான் இறந்துவிடுவேன் என்று சொன்ன சில நிமிடங்களில் அவர் மரணம் அடைந்தது குறிப்பிடத்தக்கது. அவர் உயிர் போகப் போவதை முன்கூட்டியே தெரிந்திருந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஜாபர் ஷரிப்பின் உடல் இன்று பொதுமக்கள் அஞ்சலிக்கு பிறகு இன்று முஸ்லிம் மத சம்பிரதாயப்படி அக்கம் செய்யப்பட்டது.

ஜாபர் ஷரிப் சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேலாக காங்கிரசில் செல்வாக்கு பெற்ற நபராக திகழ்ந்தார். இந்திராகாந்தியின் தீவிர விசுவாசியான அவர் இந்திராவின் ஆதரவினால் அரசியலில் பல்வேறு நிலைக்கு உயர்ந்தார்.

மத்திய மந்திரி பதவியும் வழங்கப்பட்டது.

அவர் ரெயில்வே மந்திரியாக இருந்தபோது, பல வளர்ச்சி திட்டங்களை உருவாக்கியது குறிப்பிடத்தக்கது. #FormerRailwayminister #CKJafferSharief
Tags:    

Similar News