செய்திகள்
கன்னட நடிகர் அம்பரீஷ் உடலுக்கு ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி
பிரபல கன்னட நடிகர் அம்பரீஷ் நேற்று காலமானார். அவரது உடலுக்கு நடிகர் ரஜினி காந்த், கர்நாடக முதல்வர் குமாரசாமி நேரில் அஞ்சலி செலுத்தினார்கள். #ActorAmbareesh
அம்பரீஷ் பிரபல கன்னட நடிகர் ஆவார். அவர் கன்னட படங்களில் ஆக்ஷன் ஹீரோவாக நடித்துள்ளார். மேலும் நடிகர் ரஜினியின் நெருங்கிய நண்பர் ஆவார். அவர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அமைச்சரவையில் கேபினட் அமைச்சராக பதவி வகித்தவர்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அம்பரீஷ் நேற்றிரவு பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார். இந்த செய்தியைக் அறிந்த நடிகர் ரஜினிகாந்த் ஆழந்த இரங்கலை தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இன்று கர்நாடகா சென்ற ரஜினிகாந்த், அம்பரீஷ் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார். கர்நாடக முதல்வர் குமாரசாமி, முன்னாள் பிரதமர் தேவகவுடா ஆகியோரும் நேரில் அஞ்சலி செலுத்தினார். அம்பரீஷ் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட இருக்கிறது. #ActorAmbareesh