செய்திகள்

பீகார் சிறுமிகள் இல்லத்தில் பாலியல் பலாத்காரம் - முன்னாள் பெண் மந்திரி கோர்ட்டில் சரண்

Published On 2018-11-20 21:10 GMT   |   Update On 2018-11-20 21:41 GMT
சிறுமிகள் பாலியல் பலாத்காரம் தொடர்பான வழக்கில் பீகார் முன்னாள் பெண் மந்திரி மஞ்சு வர்மா கோர்ட்டில் சரண் அடைந்தார். #Muzaffarpur #BiharMinister #ManjuVerma #Surrender
பாட்னா:

பீகார் மாநிலம் முசாபர்பூர் நகரில் அரசு நிதி உதவியுடன் நடத்தப்பட்டு வரும் சிறுமிகள் இல்லம் ஒன்றில் 30-க்கும் மேற்பட்ட சிறுமிகள் கற்பழிக்கப்பட்ட சம்பவம் சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியும், சிறுமிகள் இல்லத்தின் நிர்வாகியுமான பிரஜேஷ் தாக்குர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு விட்டார். இவர், அண்மையில் மந்திரி பதவியை இழந்த மஞ்சு வர்மாவின் கணவரான சந்திரசேகர் வர்மாவின் நெருங்கிய கூட்டாளி ஆவார்.

இதனால், சிறுமிகள் பாலியல் பலாத்கார விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ. போலீசார் மஞ்சு வர்மாவின் வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கிருந்து ஏராளமான வெடி பொருட்கள் கைப்பற்றப்பட்டது. இதனால் கணவன்-மனைவி இருவர் மீதும் ஆயுத தடுப்பு சட்டத்தின் கீழ் சி.பி.ஐ. தனியாக வழக்குப்பதிவு செய்தது.

சுப்ரீம் கோர்ட்டின் கண்காணிப்பின் கீழ் நடந்து வரும் இந்த வழக்கில் சந்திரசேகர் வர்மா கடந்த மாதம் 29-ந்தேதி கோர்ட்டில் சரண் அடைந்தார்.

இந்தநிலையில் அவருடைய மனைவி மஞ்சு வர்மா சி.பி.ஐ. விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவானார். இதனால் அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தவேண்டும் என்று பீகார் மாநில போலீசாருக்கு கடந்த வாரம் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. மேலும் பெகுசராய் நகர கோர்ட்டு மஞ்சு வர்மாவின் சொத்துகளை முடக்கியது.

இதனால் வேறு வழியின்றி அவர் நேற்று பெகுசராய் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் சரண் அடைந்தார். வருகிற 1-ந்தேதி மஞ்சுவர்மாவை காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார்.

இந்தநிலையில் முசாபர்பூர் இல்லத்தில் தங்கியிருந்த சிறுமிகளுக்கு செக்ஸ் உறவு கொள்வது எப்படி என்றும் ஆபாச பாடல்களுக்கு கவர்ச்சி நடனம் ஆடுவது எப்படி எனவும் சொல்லிக் கொடுத்த சைஸ்தா பிரவீன் (எ) மது என்ற பெண்ணை சி.பி.ஐ. போலீசார் நேற்று கைது செய்தனர்.

இந்த வழக்கில் இவரையும் சேர்த்து இதுவரை 17 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

தலைமறைவானதாக கூறப்பட்ட நிலையில் மது நேற்று காலை சி.பி.ஐ.யிடம் விசாரணைக்காக ஆஜராகி இருந்தார். தீவிர விசாரணைக்கு பிறகு சி.பி.ஐ. போலீசார் அவரை கைது செய்தனர்.
Tags:    

Similar News