செய்திகள்

நாளை திப்பு ஜெயந்தி - கர்நாடகாவின் குடகு மாவட்டத்தில் 144 தடை உத்தரவு

Published On 2018-11-09 13:44 GMT   |   Update On 2018-11-09 13:44 GMT
கர்நாடக மாநிலத்தில் திப்பு சுல்தான் பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாட எதிர்ப்பு பெருகிவரும் நிலையில் அசம்பாவிதங்களை தவிர்க்க குடகு மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. #144inKodagu #TipuJayanti
பெங்களூரு:

கர்நாடகம் உள்ளிட்ட இந்தியாவின் தெற்கு பகுதிகளை ஆண்ட திப்பு சுல்தானின் பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.

தனது ஆட்சிக்காலத்தில் இந்துக்களை கொடுமைப்படுத்தி, கொடூரமாக கொன்றுகுவித்த திப்பு சுல்தானின் பிறந்தநாள் விழாவை  சிறுபான்மையின மக்களின் ஓட்டுகளை கவரும் நோக்கத்தில் மாநில அரசு நடத்துவதாக சமீபகாலமாக எதிர்ப்பு அதிகரித்து வருகிறது.

திப்பு ஜெயந்தி விழாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் இன்று பா.ஜ.க. தொண்டர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பெங்களூரில் நடந்த இந்த போராட்டத்தில் பங்கேற்ற தொண்டர்கள், திப்பு ஜெயந்திக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி முழக்கங்களை எழுப்பினர்.

நாளை நடைபெறும் திப்பு ஜெயந்தி விழாவில் பங்கேற்பதாக இருந்த முதல் மந்திரி குமாரசாமி அந்த நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், அசம்பாவிதங்களை தவிர்க்க  குடகு மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. #144inKodagu  #TipuJayanti 
Tags:    

Similar News