செய்திகள்

பிரதமர் மோடியை தண்டிப்பதற்காக மக்கள் காத்து கொண்டு இருக்கிறார்கள் - சிவசேனா

Published On 2018-11-08 21:38 GMT   |   Update On 2018-11-08 22:39 GMT
பணமதிப்பிழப்பீடு நடவடிக்கைக்காக பிரதமர் நரேந்திர மோடியை தண்டிப்பதற்காக மக்கள் காத்து கொண்டு இருப்பதாக பாஜகவின் கூட்டணி கட்சியான சிவசேனாவின் செய்தி தொடர்பாளர் மனிஷா கயாண்டே கடுமையாக விமர்சித்துள்ளார். #BJP #PMModi #ShivSena
மும்பை:

மகாராஷ்டிரா மாநிலத்தின் முக்கிய கட்சிகளில் ஒன்றான சிவசேனா, பாஜக கட்சியுடன் மத்தியில் கூட்டணியில் உள்ளது. இருப்பினும் பாஜக அரசினை மிகவும் கடுமையாக சாடியும், விமர்சித்தும் வருகிறது.

இந்நிலையில், பணமதிப்பிழப்பீடு அறிவிக்கப்பட்டு 2 ஆண்டுகள் நிறைவு பெற்ற நிலையில், அதுகுறித்து சிவசேனா கட்சியின் செய்தித்தொடர்பாளர் மனிஷா கயாண்டே செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், பணமதிப்பிழப்பீடு நடவடிக்கை முழுமையான தோல்வியடைந்த ஒரு திட்டம் என தெரிவித்துள்ளார்.



மேலும், பணமதிப்பிழப்பீடு மூலம், கள்ள நோட்டுகளையும், பயங்கரவாதிகளுக்கான நிதியுதவியை தடுக்க இருப்பதாகவும் மத்திய அரசு அறிவித்து இருந்தது ஆனால் ஒன்று கூட நடக்கவில்லை என அவர் கூறியுள்ளார். பணமதிப்பிழப்பீடு மூலம் வருமான வரி கட்டுவோர் வீதம் அதிகரித்து இருப்பதாக கூறும் மத்திய நிதி மந்திரி, இந்த பணமதிப்பிழப்பீடு மூலம் எத்தனை பேர் வேலை இழந்தார்கள் என்பதை சொல்ல மறுக்கிறார் என குற்றம்சாட்டியுள்ளார்.

பணமதிப்பிழப்பீடு அறிவிக்கப்பட்டு 2 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், அதனால் ஏற்பட்ட பாதிப்புகளுக்காக பிரதமர் மோடியை தண்டிக்க மக்கள் காத்துக்கொண்டு இருப்பதாக சிவசேனாவின் செய்தி தொடர்பாளர் மனிஷா கயாண்டே அறிவித்துள்ளார். #BJP #PMModi #ShivSena
Tags:    

Similar News