செய்திகள்

விவாகரத்து மனு செய்த லாலு மகன் திடீர் மாயம்

Published On 2018-11-07 15:26 IST   |   Update On 2018-11-07 15:26:00 IST
விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த பீகார் முன்னாள் முதல்-மந்திரி லாலு பிரசாத் யாதவின் மூத்த மகன் தேஜ் பிரதாப் திடீரென மாயமாகியுள்ளார். #TejPratapYadav
பாட்னா:

பீகார் முன்னாள் முதல்- மந்திரி லாலுபிரசாத் யாதவின் மூத்த மகன் தேஜ்பிரதாப்.

இவருக்கும், பீகார் எம்.எல்.ஏ. சந்திரிகாவின் மகள் ஐஸ்வர்யா ராய்க்கும் கடந்த மே மாதம் திருமணம் நடந்தது.

பீகார் தலைநகர் பாட்னாவில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரி மைதானத்தில் ரூ.100 கோடி செலவில் மிகவும் பிரமாண்டமாக நடந்த இந்த திருமணம் தற்போது விவாகரத்துக்கு வந்துள்ளது.

திருமணமான 6 மாதத்தில் விவாகரத்து கேட்டு தேஜ் பிரதாப் பாட்னா கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். இது அவரது குடும்பத்தினருக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த வி‌ஷயத்தை கேள்விப்பட்ட சிறையில் உள்ள லாலுபிரசாத் யாதவ் தன்னை பார்க்க உடனடியாக வருமாறு தேஜ்பிரதாப்புக்கு அழைப்பு விடுத்தார். இதைத் தொடர்ந்து அவர் தந்தையை பார்க்க சென்றார்.

தந்தையை பார்த்து விட்டு ராஞ்சியில் இருந்து பாட்னா திரும்பும்போது தேஜ்பிரதாப் யாதவ் திடீரென மாயமானார். போதிகயாவில் உள்ள ஓட்டலில் தங்கி இருந்தபோது அவர் மாயமானார். தேஜ்பிரதாப் எங்கு சென்றார் என்ற விவரம் தெரியவில்லை. #TejPratapYadav
Tags:    

Similar News