செய்திகள்

அரசு விடுமுறையில் இருந்து உழைப்பாளர் தினத்தை நீக்கிய பாஜக அரசு - எதிர்க்கட்சிகள் கண்டனம்

Published On 2018-11-05 11:24 GMT   |   Update On 2018-11-05 11:24 GMT
உழைப்பாளர் தினமாக கொண்டாடப்படும் மே தினத்தை மாநில அரசு விடுமுறை நாட்கள் பட்டியலில் இருந்து நீக்கிய திரிபுரா மாநில பாஜக அரசுக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். #Tripura #MayDay
அகர்தலா:

சர்வதேச அளவில் உழைப்பாளர் தினமாக மே தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில், திரிபுரா மாநிலத்தின் பாஜக அரசு உழைப்பாளர் தினத்தை மாநில பொதுவிடுமுறை பட்டியலில் இருந்து நீக்குவதாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்புக்கு பலதரப்பில் இருந்தும் கடும் விமர்சனங்களும், கண்டனங்களும் வலுத்து வருகிறது.

இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அம்மாநில எதிர்க்கட்சியான கம்யூனிஸ்ட் கட்சி, மே தினத்தை மாநில பொது விடுமுறை பட்டியலில் மீண்டும் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.



ஆளும் பாஜக அரசின் இந்த செயலானது தொழிலாளர் வர்க்கத்துக்கு எதிரானது என்றும், இதன்மூலம் பாஜக தொழிலாளர்களை எப்படி பார்க்கிறது என புரிந்துகொள்ள முடியும் எனவும் திரிபுரா மாநில முன்னாள் தொழிலாளர் நலத்துறை மந்திரி மனிக் டே கடுமையாக சாடியுள்ளார்.

மேலும், இதற்கு முன்னதாக இந்தியாவின் எந்த மாநிலமும் மே தினத்தை பொதுவிடுமுறை பட்டியலில் இருந்து நீக்கியதாக கேள்விப்பட்டது இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். #Tripura #MayDay 
Tags:    

Similar News