செய்திகள்

அக்பருதீன் ஒவைசியை எதிர்த்து பெண் வேட்பாளரை களமிறக்கிய பா.ஜ.க.

Published On 2018-11-03 12:57 GMT   |   Update On 2018-11-03 12:57 GMT
தெலுங்கானா சட்டசபை தேர்தலில் சந்திரயான்குட்டா தொகுதியில் போட்டியிடும் அக்பருதீன் ஒவைசியை எதிர்த்து சையத் ஷாஹேஜாடி என்ற முஸ்லிம் பெண்ணை வேட்பாளராக பா.ஜ.க. களமிறக்கியது. #BJPfields #SyedShahezadi #AkbaruddinOwaisi
ஐதராபாத்:

அனைத்திந்திய மஜ்லிஸ்-இ-இட்டெஹாதுல் முஸ்லிமீன் கட்சி தலைவரான அசாதுதீன் ஒவைசி
ஐதரபாத் பாராளுமன்ற தொகுதி உறுப்பினராக பதவி வகித்து வருகிறார்.

இதே கட்சியை சேர்ந்த அசாதுதீனின் சகோதரர் அக்பருதீன் ஒவைசி, தெலுங்கானா மாநில சட்டசபையில் ஐதராபாத் நகருக்குட்பட்ட சந்திரயான்குட்டா தொகுதி எம்.எல்.ஏ.வாக கடந்த 1999, 2004, 2009 மற்றும் 2014-ம் ஆண்டுகளில் போட்டியிட்டு வெற்றிப் பெற்றுள்ளார்.

இந்த பகுதியில் அனைத்திந்திய மஜ்லிஸ்-இ-இட்டெஹாதுல் முஸ்லிமீன் கட்சிக்கு அதிக செல்வாக்கு உள்ளதால் டிசம்பர் 7-ம் தேதி நடைபெறும் சட்டசபை தேர்தலிலும் அக்பருதீன் ஒவைசி இதே தொகுதியில் போட்டியிடுகிறார்.

இந்நிலையில், அக்பருதீன் ஒவைசியை எதிர்த்து சையத் ஷாஹேஜாடி என்ற முஸ்லிம் பெண்ணை வேட்பாளராக பா.ஜ.க. களமிறக்கி உள்ளது.



ஐதராபாத்தில் உள்ள உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியல் பயின்ற பட்டதாரியான சையத் ஷாஹேஜாடி, ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மாணவர் பிரிவான அகில பாரத வித்யா பரிஷத் அமைப்பின் தலைவராக தனது கல்லூரி காலத்தில் பொறுப்பு வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. #BJPfields #SyedShahezadi #AkbaruddinOwaisi
Tags:    

Similar News