செய்திகள்

குருகிராமில் சோகம் - பாதுகாவலரால் சுடப்பட்ட நீதிபதியின் மகனும் உயிரிழப்பு

Published On 2018-10-23 07:47 IST   |   Update On 2018-10-23 07:47:00 IST
அரியானாவில் பாதுகாவலரால் சுடப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நீதிபதியின் மகன் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். #JudgeFamilyAttack
குருகிராம்:

அரியானாவில் குருகிராம் நகரில் மக்கள் நெருக்கடி மிகுந்த ஆர்கடியா மார்க்கெட் அருகே கடந்த அக்டோபர் 13-ஆம் தேதி நீதிபதியின் மனைவி மற்றும் மகனை நீதிபதியின் பாதுகாவலரே துப்பாக்கியால் சுட்டார். இதில் படுகாயம் அடைந்த இருவரும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில், நீதிபதியின் மனைவி உயிரிழந்ததாக மருத்துவர்கள் முன்னதாக அறிவித்திருந்தனர்.

பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த நீதிபதியின் மகன் துருவ் (18) சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் இன்று உயிரிழந்தார்.



பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த பாதுகாவலரே அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. துப்பாக்கிச்சூடு நடத்திய மகிபால் என்ற பாதுகாவலரை கைது செய்த போலீசார், இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். #JudgeFamilyAttack

Tags:    

Similar News