செய்திகள்

பேரிடர் மீட்பு பணியில் அரும்சேவை ஆற்றுபவர்களுக்கு நேதாஜி விருது - பிரதமர் மோடி அறிவிப்பு

Published On 2018-10-21 10:17 GMT   |   Update On 2018-10-21 10:17 GMT
நிலநடுக்கம், வெள்ளம், தீவிபத்து உள்ளிட்ட பேரிடர் மீட்பு பணியின்போது சிறப்பாக செயல்படுபவர்களுக்கு ஆண்டுதோறும் நேதாஜி விருது வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். #PMModi #Netajiaward
புதுடெல்லி:

டெல்லியில் இன்று நடைபெற்ற காவலர்கள் வீரவணக்க நாள் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று சிறப்புரையாற்றினார்.

நாட்டுக்காக உழைப்பதில் காவலர்கள் மட்டுமின்றி நிலநடுக்கம், வெள்ளம், தீவிபத்து உள்ளிட்ட பேரிடர் மீட்பு பணியின்போது சிறப்பாக செயல்படும் தேசிய - மாநில பேரிடர் மீட்புப் படையினரின் பங்களிப்பும் அபாரமானது. அவர்களும் நமது வீரம்மிக்க காவலர்கள்தான் என அவர் குறிப்பிட்டார்.



அவர்களின் வீரத்தை மட்டுமின்றி, அர்ப்பணிப்புணர்வு, தியாகம் ஆகியவற்றை நாடு மறந்துவிடாது. தீவிபத்து, கட்டிட விபத்து, வெள்ளப்பெருக்கில் இருந்து நம்மை காப்பாற்றியவர்கள் யார்? என்பது காப்பாற்றப்பட்டு, உயிர் பிழைத்தவர்களுக்கே தெரியாது என உணர்ச்சி மேலோங்க கூறிய மோடி, இந்த ஆண்டில் இருந்து பேரிடர் காலத்தில் சிறப்பாக சேவையாற்றும் வீரர்களுக்கு நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பெயரால் தேசிய விருதுகள் வழங்கப்படும் என அறிவித்தார்.

ஒவ்வொரு ஆண்டும் நேதாஜியின் பிறந்தநாளான ஜனவரி மாதம் 23-ம் தேதி இந்த விருதுக்கு தேர்வானவர்களின் பெயர்கள் அறிவிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார். #PMModi #Netajiaward
Tags:    

Similar News