செய்திகள்

ஷீரடியில் பிரதமரின் வீட்டு வசதி திட்ட பயனாளிகளிடம் வீட்டு சாவிகளை ஒப்படைத்தார் மோடி

Published On 2018-10-19 07:14 GMT   |   Update On 2018-10-19 07:14 GMT
ஷீரடியில் நடைபெற்ற விழாவில், பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தின்கீழ் பயன்பெற்ற பயனாளிகளுக்கு பிரதமர் மோடி இன்று வீட்டு சாவிகளை ஒப்படைத்தார். #ShirdiSaiBaba #Modi #PMAY
ஷீரடி:

மகாராஷ்டிர மாநிலத்தில் அமைந்துள்ளது ஷீரடி சாய்பாபா கோவில். ஷீரடி சாய்பாபா விஜயதசமி தினத்தன்று மகா சமாதி அடைந்தார். எனவே ஒவ்வொரு ஆண்டும் விஜயதசமி தினத்தன்று சாய்பாபாவின் மகா சமாதி தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு 100-வது சமாதி தினத்தை முன்னிட்டு அக்டோபர் 1 முதல் சிறப்பு பூஜை நடந்து வருகிறது.
 
இந்நிலையில், சாய்பாபா மகா சமாதி நிறைவு தினமான இன்று சிறப்பு பூஜைகள், தரிசன ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிறைவு நாள் பூஜையில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று டெல்லியில் இருந்து ஷீரடிக்கு வந்தார். முதலில் சாய்பாபா சமாதி கோவிலுக்கு சென்று வழிபட்டார்.


பின்னர் பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தின்கீழ் பயனாளிகளுக்கு வீட்டு சாவிகளை ஒப்படைக்கும் விழா நடைபெற்றது. விழாவில் 10 பயனாளிகளுக்கு வீட்டு சாவிகளை பிரதமர் மோடி ஒப்படைத்தார்.

அதேசமயம் அமராவதி, நாக்பூர், நந்தூர்பர், தானே, சோலாப்பூர் உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற விழாவிலும் பயனாளிகளுக்கு வீட்டு சாவிகள் ஒப்படைக்கப்பட்டன. அவர்களுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் பிரதமர் மோடி உரையாடினார்.

தானேவைச் சேர்ந்த பெண்களிடம் மோடி பேசும்போது, ‘உங்கள் குழந்தைகளை படிக்க வைப்பது, நாட்டில் வறுமைக்கு எதிரான போராட்டத்திற்கு மிகப்பெரிய வலுசேர்க்கும்’ என்றார். நிகழ்ச்சியில் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் பலர் பங்கேற்றனர்.  #ShirdiSaiBaba #Modi #PMAY
Tags:    

Similar News