செய்திகள்

பாராளுமன்றம் முதல் பஞ்சாயத்து அலுவலகம் வரை பா.ஜ.க. கொடிதான் பறக்கும் - அமித் ஷா

Published On 2018-10-14 19:21 IST   |   Update On 2018-10-14 19:21:00 IST
மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அமித் ஷா வரும் 2019-ம் ஆண்டுக்கு பிறகு பாராளுமன்றம் முதல் பஞ்சாயத்து அலுவலகம் வரை பா.ஜ.க. கொடிதான் பறக்கும் என குறிப்பிட்டுள்ளார். #BJPflag #PanchayattoParliament #AmitShah
போபால்:

விரைவில் சட்டசபை தேர்தலை சந்திக்கவுள்ள மத்தியப்பிரதேசம் மாநிலத்துக்குட்பட்ட ஹோஷங்காபாத் பகுதியில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் பா.ஜ.க. தேசிய தலைவர் அமித் ஷா இன்று பங்கேற்று பேசினார்.

ஏழை குடும்பத்தில் பிறந்தவர்களும், எவ்வித அரசியல் பின்பலமும் இல்லாத ஏழை டீ வியாபாரியின் மகனும் பா.ஜ.கவில்தான் இந்த நாட்டின் பிரதமராக உயர முடியும் என அவர் குறிப்பிட்டார்.

மத்தியப்பிரதேசம் சட்டசபை தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை நீங்கள் தர வேண்டும். இந்த வெற்றியின் மூலம் வரும் 2019-க்கு பிறகு அடுத்த 50 ஆண்டுகளுக்கு பாராளுமன்றம் முதல் நாட்டில் உள்ள அனைத்து பஞ்சாயத்து அலுவலகங்கள் வரை பா.ஜ.க. கொடிதான் பறக்கும் என்ற நிலையை நீங்கள் உருவாக்க வேண்டும் என அம்மாநில வாக்களர்களை அவர் கேட்டுக் கொண்டார். #BJPflag #PanchayattoParliament #AmitShah
Tags:    

Similar News