செய்திகள்

தேசிய மனித உரிமை ஆணையத்தின் வெள்ளிவிழா - சிறப்பு தபால் தலையை பிரதமர் வெளியிட்டார்

Published On 2018-10-12 17:47 IST   |   Update On 2018-10-12 17:47:00 IST
தேசிய மனித உரிமை ஆணையத்தின் வெள்ளிவிழாவை கொண்டாடும் வகையில் சிறப்பு தபால் தலையை பிரதமர் மோடி இன்று வெளியிட்டார். #Modiissuespostagestamp #NHRC
புதுடெல்லி:

நாட்டு மக்களுக்கு எதிரான வன்கொடுமைகள் தொடர்பாக புகார்களின்பேரில் விசாரிக்கவும், நாட்டில் நடைபெறும் சில அத்துமீறல்கள் தொடர்பாக தாமாகவே முன்வந்து விசாரணை நடத்தவும் அதிகாரம் படைத்த அமைப்பாக தேசிய மனித உரிமை ஆணையம் இயங்கி வருகிறது.

இந்த அமைப்பு தொடங்கப்பட்ட 25-ம் ஆண்டுவிழா இன்று டெல்லியில் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி,  சிறப்பு தபால் தலையை வெளியிட்டார். தேசிய மனித உரிமை ஆணையத்தின் நவீனமயமாக்கப்பட்ட இணையதளத்தையும் அவர் தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, முன்னர் நமது மகள்களின் வாழ்வு தொடர்பாக உத்தரவாதம் இல்லாத நிலைமை நிலவியது. குறுகிய எண்ணம் கொண்ட சிலர் பெண் சிசுக்களை கருவிலேயே கொல்ல நினைத்தனர்.


கடந்த நான்கரை ஆண்டில்  எங்கள் ஆட்சிக்காலத்தில் ஏழைகள், பிற்படுத்தப்பட்டவர்கள், ஒதுக்கப்பட்டவர்கள் மற்றும் ஒடுக்கப்பட்டர்களின் கண்ணியத்தை பாதுகாக்க இந்த அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளை மிகப்பெரிய சாதனை என்பதை குறிப்பிட விரும்புகிறோம்.

மத்திய அரசு கொண்டுவந்த ‘மகள்களை காப்பாற்றுங்கள் - மகள்களை படிக்க வையுங்கள்’ திட்டத்தின் மூலம் இந்த நிலை மாற்றப்பட்டுள்ளதை நான் பெருமையுடன் குறிப்பிட விரும்புகிறேன்.

இரவு நேரங்களில் பணியாற்றும் பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகளை ஒழிக்கவும் அவர்களுக்கான பாதுகாப்பை அதிகரிக்கவும் எங்கள் அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளது.  #Modiissuespostagestamp #NHRC #NHRCSilverJubilee
Tags:    

Similar News