செய்திகள்

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி

Published On 2018-10-09 08:49 GMT   |   Update On 2018-10-09 12:08 GMT
தொடர்ந்து சரிந்துவந்த இந்திய ரூபாயின் மதிப்பு அமெரிக்க டாலருக்கு எதிராக இன்று வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்துள்ளது. #RupeeagainstUSdollar #Rupeeclosesrecordlow
மும்பை:

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான வர்த்தகப் போர் பதற்றம், சர்வதேச சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை உயர்வு போன்றவற்றால் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு முந்தைய வரலாற்றில் எப்போதும் இல்லாத அளவுக்கு தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வருகிறது.

பங்குச்சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியபோது, நேற்றைய டாலர் விலைக்கு எதிரான மதிப்பான ரூ.74.06 காசுகளுடன் ஆரம்பமானது. ஆனால், வர்த்தகத்தின் இடையே ரூபாய் மதிப்பு படிப்படியாக சரிந்து இன்று பிற்பகல் நிலவரப்படி ரூ.74.26 காசுகளுக்கு வந்தது.

பங்குச்சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கிய சில மணி நேரங்களில் 20 காசுகள் சரிவை சந்தித்துள்ளதால் இன்று மாலை நிலவரம் எப்படி இருக்குமோ? என்ற கவலை முதலீட்டாளர்களை ஆட்கொண்டுள்ளது.

இந்நிலையில், இன்று மாலை பங்குச்சந்தை வர்த்தகம் முடிவடைந்தபோது வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்த இந்திய ரூபாயின் மதிப்பு டாலருக்கு எதிராக 74.39 என்ற அளிவில் மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளது.

கடந்த மாதம் இதே தேதியில் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 72 ரூபாய்க்கு மிகாமல் இருந்த நிலையில் ஒரே மாதத்தில் 2 ரூபாய்க்கு அதிகமான சரிவு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. #RupeeagainstUSdollar  #Rupeeclosesrecordlow
Tags:    

Similar News