செய்திகள்

காஷ்மீரில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டவர் கழுத்தை அறுத்து படுகொலை

Published On 2018-10-06 16:50 IST   |   Update On 2018-10-06 16:50:00 IST
ஜம்மு-காஷ்மீரில் உள்ள பாரமுல்லா மாவட்டத்தில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 30 வயது நபர் கழுத்து அறுபட்ட நிலையில் இன்று பிரேதமாக மீட்கப்பட்டார். #Manabductedbymilitants #abductedmanfounddead
ஸ்ரீநகர்:

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், சோபியான் மாவட்டம், துஜ்ஜார் பகுதியை சேர்ந்த வியாபாரி தவ்சீப் அஹ்மத் கானி(30). கடந்த புதன்கிழமை இவர் கடையில் இருந்தபோது பயங்கரவாதிகள் இவரை கடத்திச் சென்றனர். தவ்சீப் அஹ்மத் கானியை கண்டுபிடிக்க போலீசார் தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.

இந்நிலையில், வடக்கு காஷ்மீர் மாவட்டத்தில் உள்ள சேக் ஹர்வான் பகுதியில் ஒரு பழத்தோட்டத்தில் கழுத்து அறுபட்ட நிலையில்  தவ்சீப் அஹ்மத் கானியின் பிரேதத்தை போலீசார் இன்று கண்டெடுத்துள்ளனர்.

அவரை கடத்திச் சென்ற விதம், கொல்லப்பட்ட முறையை பார்க்கும்போது இது லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகளின் வெறிச்செயலாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக போலீசார் குறிப்பிட்டுள்ளனர். #JKManabducted #Manabductedbymilitants #abductedmanfounddead
Tags:    

Similar News