செய்திகள்

அமெரிக்காவில் நடந்த கார் விபத்தில், தெலுங்குதேசம் எம்.எல்.சி. பலி

Published On 2018-10-03 23:05 GMT   |   Update On 2018-10-03 23:05 GMT
அமெரிக்காவில் நடந்த கார் விபத்தில் ஆந்திராவில் தெலுங்குதேசம் கட்சி சார்பில் எம்.எல்.சி.யாக இருந்து வந்த மூர்த்தி என்பவர் பலியானார். #AndhraPradesh #MLC #MVVSMurthy
அமராவதி:

ஆந்திராவில் தெலுங்குதேசம் கட்சி சார்பில் எம்.எல்.சி.யாக இருந்து வந்தவர் மூர்த்தி (வயது 80). விசாகப்பட்டணம் தொகுதியில் இருந்து 2 முறை மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவரும், கிதம் பல்கலைக்கழக தலைவருமான மூர்த்தி, அமெரிக்காவின் கலிபோர்னியாவில் 6-ந் தேதி நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக அமெரிக்கா சென்றிருந்தார்.

இதற்காக அங்கு தங்கியிருந்த மூர்த்தி கலிபோர்னியாவில் இருந்து அலாஸ்காவுக்கு ஒரு காரில் சென்றார். செல்லும் வழியில் இந்த கார், லாரி ஒன்றுடன் பயங்கரமாக மோதியது. இதில் மூர்த்தி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். அவருடன் சென்ற பசவ புன்னையா, சவுத்ரி ஆகியோரும் உயிரிழந்தனர். மேலும் ஒருவர் படுகாயமடைந்தார்.

விபத்தில் உயிரிழந்தவர்களின் உடலை இந்தியாவுக்கு அனுப்பிவைப்பதற்கான நடவடிக்கைகளை வட அமெரிக்காவில் உள்ள தெலுங்கு கூட்டமைப்பு தலைவர் சதிஷ் வெமனா செய்து வருகிறார்.

அமெரிக்காவில் நடந்த கார் விபத்தில் மூர்த்தி பலியான சம்பவம் அறிந்து தெலுங்குதேசம் கட்சித்தலைவர் சந்திரபாபு நாயுடு மிகுந்த அதிர்ச்சி வெளியிட்டு உள்ளார். அத்துடன் மூர்த்தியின் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலும் தெரிவித்து உள்ளார். சமீப காலமாக தெலுங்குதேசம் கட்சித்தலைவர்கள் பலர் விபத்தில் உயிரிழந்து வருவது குறித்து அவர் வருத்தமும் தெரிவித்து உள்ளார். 
Tags:    

Similar News