செய்திகள்

தெலுங்கானாவில் முன்னாள் கைதிகள் 155 பேர் வேலை வாய்ப்பு முகாமில் தேர்வு

Published On 2018-09-30 10:55 GMT   |   Update On 2018-09-30 10:55 GMT
தெலுங்கானா மாநிலத்தில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் திருந்தி வாழ நினைக்கும் 155 முன்னாள் கைதிகளுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. #Telangana #PrisonDepartment #Jobfair
ஐதராபாத்:

தெலுங்கானா மாநிலத்தின் சிறைத்துறை சார்பில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. இதில் பிளிப்கார்ட், ஹெச்டிஎப்சி உள்பட 12 நிறுவனங்கள் இந்த முகாமில் கலந்து கொண்டன.

இந்த வேலைவாய்ப்பு முகாமில் வீட்டு வேலை, டிரைவர், எலக்ட்ரீசியன், மார்கெட்டிங் எக்சிகியூடிவ், உதவியாளர்கள் மற்றும் பல்வேறு வேலைகளுக்கான ஆட்கள் தேர்வு நடைபெற்றது 



தெலுங்கானாவின் 31 மாவட்டங்களில் இருந்து திருந்தி வாழ நினைக்கும் 230 முன்னாள் கைதிகள் இந்த முகாமில் பங்கேற்றனர். இதில் 155 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

இந்த முகாமில் வேலை பெறும் முன்னாள் கைதிகள் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவது குறைந்து வருகிறது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #Telangana #PrisonDepartment #Jobfair
Tags:    

Similar News