செய்திகள்

ஆந்திராவில் மகாத்மா காந்திக்கு கோயில் - சந்திரபாபு நாயுடு திறந்து வைக்கிறார்

Published On 2018-09-29 19:13 IST   |   Update On 2018-09-29 19:13:00 IST
நாட்டிலேயே முதன்முறையாக தேசப்பிதா மகாத்மா காந்திக்கு விஜயவாடாவில் கட்டப்பட்டுள்ள கோயிலை அக்டோபர் இரண்டாம் தேதி ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு திறந்து வைக்கிறார். #ChandrababuNaidu #MahatmaGandhiTemple
அமராவதி:

வெள்ளையர் ஆட்சிக்கு எதிராக போராடி இந்தியாவுக்கு விடுதலை பெற்றுதந்த தேசப்பிதா மகாத்மா காந்திக்கு நாடு முழுவதும் பல்லாயிரக்கணக்கான சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், அவருக்கென கோயில் ஏதும் உருவாக்கப்படவில்லை.

இந்நிலையில், ஆந்திர மாநிலம், பழைய விஜயவாடா நகரில் உள்ள சய்யாட் அப்பாலா சுவாமி கல்லூரி வளாகத்தில்  மகாத்மா காந்திக்கு எழுப்பப்பட்டுள்ள கோயிலை திறந்து வைத்து சிறப்பிக்குமாறு இந்த கோயிலை நிர்மாணித்த சுதந்திரப் போராட்ட தியாகி உப்புலுரி மல்லிகார்ஜுனா சர்மா என்பவர் ஆந்திர மாநில முதல் மந்திரி சந்திரபாபு நாயுடுவை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தார்.

அவரது அழைப்பை ஏற்றுகொண்ட சந்திரபாபு நாயுடு, வரும் 2-ம் தேதி 150-ம் ஆண்டு காந்தி ஜெயந்தி தினத்தன்று நாட்டிலேயே முதன்முறையாக தேசப்பிதா மகாத்மா காந்திக்கு விஜயவாடாவில் கட்டப்பட்டுள்ள கோயிலை திறந்து வைக்கிறார். #ChandrababuNaidu  #MahatmaGandhiTemple  #VijayawadaGandhiTemple
Tags:    

Similar News