செய்திகள்

இருநாட்டு உறவில் முன்னேற்றம் - மாலத்தீவுக்கு பிரதமர் மோடி நவம்பரில் பயணம்

Published On 2018-09-27 12:24 GMT   |   Update On 2018-09-27 12:24 GMT
மாலத்தீவு அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற ஜனநாயக கட்சி இந்தியாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை கொண்டுள்ளதால் பிரதமர் மோடி நவம்பர் மாதம் மாலத்தீவு செல்கிறார். #Maldives #PMModi
புதுடெல்லி:

பிரதமர் நரேந்திர மோடி உலகின் பெரும்பாலான நாடுகளில் சுற்றுப்பயணம் செய்துள்ளார். பல நாடுகளுக்கு 2 அல்லது 3 முறை கூட சென்றிருக்கிறார்.

ஆனால் இந்தியாவின் மிக அருகில் இருக்கும் மாலத்தீவுக்கு ஒருமுறை கூட அவர் சென்றது இல்லை. இத்தனைக்கு அந்த நாடு தெற்காசிய கூட்டமைப்ப்பில் (சார்க்) அங்கம் வகிக்கிறது.

அப்படி இருந்தும் மாலத்தீவுக்கு நரேந்திர மோடி சென்றது இல்லை. அங்கிருக்கும் ஆட்சி இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்து சீனாவுக்கு ஆதரவாக செயல்பட்டதால் தான் பிரதமர் அங்கு செல்லாமல் இருந்து வந்தார்.

தற்போதுள்ள அதிபர் அப்துல்லா யாமீன் இந்தியாவை தொடர்ந்து புறக்கணித்தும் வந்தார். இதனால் பிரதமர் மோடியும் அந்த நாட்டை கண்டுகொள்ளவில்லை.

இந்த நிலையில் அங்கு அதிபர் தேர்தலில் எதிர்க்கட்சியான மாலத்தீவு ஜனநாயக கட்சி வெற்றி பெற்றுள்ளது. இந்த கட்சி சார்பில் இப்ராகிம் சோலிக் அதிபராக பதவி ஏற்க உள்ளார்.

இந்த கட்சி இந்தியாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை கொண்டதாகும். எனவே இதுவரை பயணம் செல்லாமல் இருந்த மாலத்தீவுக்கு பிரதமர் நரேந்திர மோடி செல்ல திட்டமிட்டு இருக்கிறார்.

புதிய ஆட்சி பதவி ஏற்றதற்கு பிறகு அவர் நவம்பர் மாதம் அங்கு செல்வார் என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. #Maldives #PMModi
Tags:    

Similar News