செய்திகள்

பா.ஜனதாவில் இருந்து ஜஸ்வந்த்சிங் மகன் விலகல்

Published On 2018-09-23 06:11 GMT   |   Update On 2018-09-23 06:11 GMT
கருத்து வேறுபாடு காரணமாக பாரதிய ஜனதா கட்சியில் விலகுவதாக ஐஸ்வந்த்சிங் மகனான மனவேந்திரசிங் எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார். #ManvendraSingh #BJP
ஜெய்ப்பூர்:

பா.ஜனதாவை சேர்ந்த முன்னாள் மத்திய மந்திரி ஐஸ்வந்த்சிங். 80 வயதான இவர் அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கிறார்.

ஐஸ்வந்த்சிங்கின் மகன் மனவேந்திரசிங் ராஜஸ்தான் மாநிலத்தில் பா.ஜனதா எம்.எல்.ஏ.வாக இருக்கிறார். அவருக்கும் ராஜஸ்தான் முதல்-மந்திரி வசுந்தரா ராஜேவுக்கும் இடையே கடந்த சில மாதங்களாக கருத்து வேறுபாடு இருந்து வந்தது.

வசுந்தரா நடத்திய பேரணியை புறக்கணித்துவிட்டு தனியாக பேரணி நடத்தப்போவதாக அவர் ஏற்கனவே அறிவித்து இருந்தார். இதைத் தொடர்ந்து அவர் பா.ஜனதாவில் இருந்து விலகலாம் என்று கருதப்பட்டது.

இந்த நிலையில் மனவேந்திரசிங் எம்.எல்.ஏ. பா.ஜனதாவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

நான் பா.ஜனதாவில் சேர்ந்ததே மிகப்பெரிய தவறு. சுயமரியாதைக்காக அந்த கட்சியில் இருந்து விலகி உள்ளேன். எனது ஆதரவாளர்கள் மீது கட்சி தலைமை நடந்து கொண்ட விதம் மிகவும் மோசமானது. காங்கிரசில் இணையும் திட்டம் எதுவும் இல்லை.

வர இருக்கும் பாராளுமன்ற தேர்தலில் நான் எனது சொந்த ஊரான பார்மர் தொகுதியில் போட்டியிடுவேன்.

இவ்வாறு மனவேந்திரசிங் கூறியுள்ளார்.

ராஜஸ்தான் சட்டசபை தேர்தல் நெருங்கும் நேரத்தில் ஐஸ்வந்த்சிங் மகன் ஆதரவாளர்களுடன் விலகியது பா.ஜனதாவுக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம் என்று கருதப்படுகிறது. #JaswantSingh #ManvendraSingh #BJP
Tags:    

Similar News