செய்திகள்

பாகிஸ்தான் ராணுவத்தால் கொல்லப்பட்ட படைவீரர் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிதியுதவி - கெஜ்ரிவால்

Published On 2018-09-21 14:43 GMT   |   Update On 2018-09-21 14:43 GMT
பாக். ராணுவத்தால் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட படை வீரர் நரேந்திர சிங் வீட்டுக்கு சென்று ஆறுதல் கூறிய முதல் மந்திரி கெஜ்ரிவால், அவரது குடும்பத்துக்கு ஒரு கோடி ரூபாய் நிதியுதவி அளிக்கப்படும் என தெரிவித்துள்ளார். #JammuKashmir #NarendraSingh #ArvindKejriwal
புதுடெல்லி:

ஜம்மு காஷ்மீர் மாநிலம் சர்வதேச எல்லையில் ராம்கார்க் செக்டாரில் பாகிஸ்தான் ராணுவம் எல்லைப் பாதுகாப்பு படை கான்ஸ்டபிள் நரேந்திர சிங்கை கழுத்தை அறுத்து கொலை செய்தது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய ராணுவம் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பாகிஸ்தான் ராணுவத்தால் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட எல்லை பாதுகாப்பு படை வீரர் நரேந்திர சிங் வீட்டுக்கு முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் இன்று சென்றார்.



அரியானாவில் சோனிபேட் பகுதியில் உள்ள நரேந்திர சிங் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய கெஜ்ரிவால், அவரது குடும்பத்துக்கு ஒரு கோடி ரூபாய் நிதியுதவி அளிக்கப்படும். அவரது குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும்.

மேலும், சர்ஜிகர் ஸ்டிரைக் நாளை கொண்டாட முடிவு செய்துள்ள பிரதமர் மோடி, கொல்லப்பட்ட படைவீரர் நரேந்திர சிங் வீட்டுக்கு சென்று ஆறுதல் கூறவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். #JammuKashmir #NarendraSingh
Tags:    

Similar News