செய்திகள்

பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து சர்ச்சை கருத்து - மத்திய மந்திரி வருத்தம் தெரிவித்தார்

Published On 2018-09-16 22:48 GMT   |   Update On 2018-09-16 22:48 GMT
நான் ஒரு மந்திரி, பெட்ரோல், டீசல் விலை உயர்வால் எனக்கு பாதிப்பு இல்லை என சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த மத்திய மந்திரி ராம்தாஸ் அதவாலே வருத்தம் தெரிவித்தார். #FuelPriceHike #RamdasAthawale
மும்பை:

நாடு முழுவதும் தினந்தோறும் உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் விலை ஏற்றத்தால் மக்கள் கடுமையாக அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் பெட்ரோல். டீசல் விலை குறித்து மத்திய மந்திரி ராம்தாஸ் அதவாலே, ‘நான் ஒரு மந்திரி. பெட்ரோல், டீசல் விலை உயர்வால் எனக்கு பாதிப்பு இல்லை. மந்திரி பதவியை இழந்தால் நான் விலைஉயர்வால் பாதிக்கப்படலாம்’ என்று நேற்று முன்தினம் ஜெய்ப்பூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். மந்திரியின் இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதனையடுத்து ராம்தாஸ் அதவாலே நேற்று வருத்தம் தெரிவித்தார். இதுதொடர்பாக மும்பையில் நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘பெட்ரோல், டீசல் விலைஉயர்வால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் உணர்வுகளை நான் அறிவேன். சாமானிய மக்களை காயப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இல்லை’ என்று கூறியுள்ளார்.  #RamdasAthawale #UnionMinister
Tags:    

Similar News