செய்திகள்

ஜம்மு காஷ்மீரில் ரூ.10 கோடி மதிப்பிலான ஹெராயின் பறிமுதல்

Published On 2018-09-11 09:43 GMT   |   Update On 2018-09-11 09:43 GMT
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் 10 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெராயின் எனப்படும் போதைப்பொருளை கைப்பற்றியுள்ளனர். #Heroin #JammuKashmir
ஸ்ரீநகர்:

ஜம்மு காஷ்மீரில் போதைப்பொருட்கள் கடத்தப்படுவது அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். பாகிஸ்தான், வங்காள தேசம் போன்ற நாடுகளில் இருந்து கடத்தப்படும் போதைப்பொருள்கள் இந்தியாவில் பல்வேறு இடங்களில் விற்பனை செய்யப்படுகிறது.

இந்நிலையில், ஜம்மு காஷ்மீரில் உள்ள ஸ்ரீநகரில் ஹெராயின் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து, அந்த இடத்தில் அதிரடி சோதனை நடத்திய போலீசார் 2 கிலோ அளவிலான ஹெராயினை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு 10 கோடி ரூபாய் என கணக்கிடப்பட்டுள்ளது.

இந்த ஹெராயின் பாகிஸ்தானில் இருந்து கடத்திவரப்பட்டு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதையடுத்து, ஹெராயின் கடத்தியவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். #Heroin #JammuKashmir
Tags:    

Similar News