செய்திகள்

பெட்ரோல் விலை உயர்வை சமாளிக்க வீட்டு செலவை குறையுங்கள் - ராஜஸ்தான் மந்திரி அறிவுரையால் சர்ச்சை

Published On 2018-09-10 22:23 GMT   |   Update On 2018-09-10 22:23 GMT
பெட்ரோலிய பொருட்கள் விலை உயர்வை சமாளிக்க, மக்கள் தங்களது வீட்டு செலவுகளை குறைத்துக் கொள்ள வேண்டும் என தேவஸ்தான துறை மந்திரி ராஜ்குமார் ரின்வா கூறியுள்ளார். #PetrolDieselPriceHike #FuelPriceHike #RajkumarRinwa
ஜெய்ப்பூர்:

ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்து வரும் பா.ஜனதா ஆட்சியில் தேவஸ்தான துறை மந்திரியாக இருப்பவர் ராஜ்குமார் ரின்வா. இவர், பொதுமக்களுக்கு கூறிய அறிவுரை, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அவர் கூறியதாவது:-

பெட்ரோலிய பொருட்களின் பயன்பாடு அதிகரிப்பதால், அவற்றின் விலை உயர்கிறது. இது, பொதுமக்களுக்கு புரியவில்லை. பெட்ரோலிய பொருட்கள் விலை உயர்வை சமாளிக்க, மக்கள் தங்களது வீட்டு செலவுகளை குறைத்துக் கொள்ள வேண்டும். இதையும் அவர்கள் புரிந்துகொள்ள மறுக்கிறார்கள்.



நாடு முழுவதும் வெள்ள நிவாரண பணிகளுக்கு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் செலவாகும். அதற்கெல்லாம் பணம் தேவைப்படுகிறது. பெட்ரோல், டீசல் விலை, உலக சந்தையில் தீர்மானிக்கப்படுகிறது. அதற்கும், அரசுக்கும் சம்பந்தம் இல்லை.

இவ்வாறு ராஜ்குமார் ரின்வா கூறினார்.

அவரது கருத்து, ஆணவம் நிறைந்தது, மனிதத்தன்மை அற்றது என்று மாநில காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் கண்டனம் தெரிவித்துள்ளார்.  #PetrolDieselPriceHike #FuelPriceHike #RajkumarRinwa 
Tags:    

Similar News