செய்திகள்

புதிய பாதுகாப்பு ஒப்பந்தம் - இந்தியா, அமெரிக்கா இடையே கையெழுத்தானது

Published On 2018-09-06 10:04 GMT   |   Update On 2018-09-06 10:04 GMT
இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே புதிய பாதுகாப்பு ஒப்பந்தம் டெல்லியில் இன்று கையெழுத்தானது. #SushmaSwaraj #NirmalaSitharaman #MikePompeo #JamesMattis
புதுடெல்லி:

இந்தியா, அமெரிக்கா நாடுகளின் வெளியுறவு மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சகங்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தை இன்று டெல்லியில் நடைபெற்றது.

இதில் இந்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா ஸ்வராஜ், பாதுகாப்புத்துறை மந்திரி நிர்மலா சீதாராமன் மற்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மைக் பாம்பியோ, பாதுகாப்புத்துறை செயலர் ஜேம்ஸ் மேட்டீஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
 
பேச்சுவார்த்தையின் போது இரு நாடுகளுக்கும் இடையிலான வெளியுறவு மற்றும் பாதுகாப்புத்துறை தொடர்பான முக்கிய அம்சங்கள் மற்றும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. மேலும், இரு நாடுகளுக்கு இடையே புதிய பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது.

அப்போது பேசிய சுஷ்மா சுவராஜ், ஆப்கானிஸ்தான் விவகாரம் தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்பின் கொள்கை முடிவை வரவேற்கிறோம். பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் இரு நாடுகளும் இணைந்து செயலபட்டு வருகிறோம் என தெரிவித்தார்.
 
இதேபோல், பயங்கரவாதம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான விஷயங்களில் இரு நாடுகளும் ஒற்றுமையுடன் இணைந்து செயல்பட்டு வருகிறோம் என பாதுகாப்பு துறை மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். #SushmaSwaraj #NirmalaSitharaman #MikePompeo #JamesMattis
Tags:    

Similar News