செய்திகள்

வெளிநாடுகளுக்கு பிரதமருடன் பறக்கும் தனிநபர்கள் யார்? பட்டியல் வழங்க தகவல் ஆணையம் உத்தரவு

Published On 2018-09-04 19:10 IST   |   Update On 2018-09-04 19:10:00 IST
அரசுமுறை பயணமாக வெளிநாடுகளுக்கு பிரதமர் செல்லும் போது பாதுகாவலர்கள் தவிர பயணம் செய்யும் தனி நபர்கள் பட்டியலை தாக்கல் செய்ய மத்திய தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. #RTI #PMModi
புதுடெல்லி:

பிரதமர் மோடி அரசு முறை பயணமாக வெளிநாடு செல்லும் போது பாதுகாப்பு அதிகாரிகள் மற்ற அதிகாரிகள் தவிர, பிரதமருடன் செல்லும் தனி நபர்கள் குறித்த விபரங்களை தர வேண்டும் என சுபாஷ் அகர்வால் என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மத்திய வெளியுறவு அமைச்சகத்திடம் விண்ணப்பம் செய்திருந்தார்.

இந்த தகவல்களை வெளியுறவு அமைச்சகம் தர மறுக்கவே, மத்திய தலைமை தகவல் ஆணையரிடம் மேல்முறையீடு செய்தார். இந்நிலையில், “பிரதமருடன் விமானத்தில் பயணிக்கும் தனி நபர்கள் குறித்த பட்டியலை மனு தாரருக்கு அளிக்க வேண்டும்” என தலைமை தகவல் ஆணையர் மாத்தூர் வெளியுறவு அமைச்சகத்துக்கு உத்தரவிட்டார். 
Tags:    

Similar News