செய்திகள்

காஷ்மீரில் சட்டப்பிரிவு 35-ஏ தொடர்பான வழக்கு விசாரணை ஜனவரி மாதத்துக்கு ஒத்திவைப்பு

Published On 2018-08-31 10:20 GMT   |   Update On 2018-08-31 10:20 GMT
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் வெளி மாநிலத்தவர்கள் சொத்து வாங்குவதை தடுக்கும் 35-ஏ சட்டப்பிரிவை நீக்குவது தொடர்பான வழக்கு விசாரணையை சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்துள்ளது. #Article35A #SCpostshearing
புதுடெல்லி:

இந்திய ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் கடந்த 1954-ம் ஆண்டு இந்திய அரசியலமைப்பு  சட்ட சாசனத்தில் 35-ஏ என்னும் சட்டப்பிரிவு இணைக்கப்பட்டது. 

இந்தப் பிரிவின் மூலம் ஜம்மூ- காஷ்மீர் மாநிலத்தைச் சேராதவர்கள் அங்கு நிலம் வாங்க முடியாதென்று விதியுள்ளது. அதேபோல, அம்மாநில பெண்கள் வெளி மாநில ஆண்களை திருமணம் முடித்தால், அங்கு சொத்துரிமை கோர முடியாது என்றும் விதி வகுக்கப்பட்டுள்ளது. 

இந்த 35-ஏ பிரிவை நீக்குவது தொடர்பாக தொடுக்கப்பட்டுள்ள வழக்கு சுப்ரீம் கோர்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்ததில் இருந்தே அம்மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகின்றன. 

இதற்கிடையில், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பஞ்சாயத்து மற்றும் உள்ளாட்சி தேர்தல்கள் விரைவில் நடைபெறவுள்ளதால் இந்த வழக்கின் விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் என அம்மாநில அரசின் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி திபக் மிஸ்ரா, ஏ.எம்.கன்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோரை கொண்ட அமர்வின் முன்னர் விசாரணைக்கு வந்தபோது காஷ்மீர் அரசின் கோரிக்கை தொடர்பாக மத்திய அரசு மற்றும் வழக்கு தொடர்ந்தவர்களின் கருத்தை சுப்ரீம் கோர்ட் கேட்டிருந்தது. 

அவர்களின் கருத்தை இன்று பரிசீலித்த நீதிபதிகள் இவ்வழக்கி மறுவிசாரணையை ஜனவரி மாதம் இரண்டாம் வாரத்துக்கு ஒத்திவைத்தனர். #Article35A #SCpostshearing
Tags:    

Similar News