செய்திகள்

புதிதாக உருவாக்கப்படும் அமராவதியில் ரூ.150 கோடியில் ஏழுமலையான் கோவில்

Published On 2018-08-29 05:21 GMT   |   Update On 2018-08-29 05:21 GMT
ஆந்திர தலைநகர் அமராவதியில் ரூ.150 கோடியில் ஏழுமலையான் கோவில் கட்ட திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாக அக்குழுவின் தலைவர் சுதாகர் யாதவ் தெரிவித்தார். #Tirupati #Amaravati
திருமலை:

திருப்பதியில் செவ்வாய்க்கிழமை காலை மாதந்தோறும் நடைபெறும் அறங்காவலர் குழுக் கூட்டம் நடந்தது. இதில் தலைவர் சுதாகர் யாதவ், தேவஸ்தான செயல் அதிகாரி அனில்குமார் சிங்கால் மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். பின்னர் நிருபர்களிடம் சுதாகர் யாதவ் கூறியதாவது:-

புதிதாக உருவாக்கப்படும் ஆந்திர தலைநகர் அமராவதியில் உள்ள வெங்கடபாளையத்தில் ரூ.150 கோடியில் ஏழுமலையான் கோவில் கட்டப்படுகிறது.


திருமலையில் உள்ள கோவர்த்தன சத்திரம் அருகில் புதிய ஓய்வறைகளைக் கட்ட ரூ.79 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தேவஸ்தான போக்குவரத்து துறையில் பணியாற்றும் அவுட்சோர்சிங் ஊழியர்களுக்கு மாத ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது.

திருமலையில் உள்ள துரித உணவகங்கள், தேநீர் விடுதிகள், சிற்றுண்டி விடுதிகள் உள்ளிட்டவற்றில் உணவுப் பொருள்கள் அதிக விலைக்கு விற்கப்படுவதைத் தடுக்க 5 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது.

ஆந்திர மாநிலத்தில் உள்ள தேவஸ்தான கல்யாண மண்டபங்களின் வளர்ச்சி மற்றும் செப்பனிடும் பணிகளுக்கு ரூ.37 கோடி நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட முடிவுகள் கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். #Tirupati #Amaravati
Tags:    

Similar News