செய்திகள்

சமுதாயத்தில் மதவாதம் எனும் விஷத்தை பா.ஜ.க பரப்புகிறது - அகிலேஷ் யாதவ்

Published On 2018-08-25 18:23 GMT   |   Update On 2018-08-25 18:23 GMT
பாரதிய ஜனதா கட்சி சமுதாயத்தில் உள்ள மக்கள் மத்தியில் மதவாதம் எனும் விஷத்தை பரப்புவதாக சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் விமர்சித்துள்ளார். #AkhileshYadav
லக்னோ :

உத்திரப்பிரதேச மாநில முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ், சமாஜ்வாதி கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்று இன்று உரையாடினார். அப்போது அவர் குறிப்பிட்டுள்ளதாவது :-

உத்திரப்பிரதேச மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு நாளுக்கு நாள் மோசமடைந்து வருவதால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உருவாகியுள்ளது. அடிப்படை வசதிகள் மற்றும் வேலைவாய்ப்பு இல்லாத காரணத்தால் இளைஞர்கள் தவறான பாதையில் செல்லும் கட்டாயத்திற்கு உள்ளாக்கப்படுகிறார்கள்.

மத்தியில் மற்றும் மாநிலத்தில் ஆளும் பா.ஜ.க அரசுகள், சமுதாயத்தில் உள்ள மக்கள் மத்தியில் மதவாதம் எனும் விஷத்தை பரப்பி வருகின்றனர். நாட்டில் உள்ள மக்கள் அனைவருக்கும் கல்வி கிடைக்க செய்தாலே அவர்களுக்கான சொந்த கழிவறைகளை அவர்களாகவே கட்டிக்கொள்வார்கள்.

இவ்வாறு அவர் தெரிவித்தார். #AkhileshYadav
Tags:    

Similar News